கலங்கப்படுத்தும் கழிவுகள்; சிரமத்தில் ஸ்ரீவி., மக்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கழிவுகளால் சாக்கடைகள் அடைப்பட கொசுத்தொல்லை , துர்நாற்றத்தை அணுபவிக்கும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர். நகரின் 33 வார்டு சாக்கடைகள் வடமலைக்குறிச்சி, செங்குளம், பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து பாதைகளுடன் இணையும் வகையில் உள்ளது. இவற்றை தினசரி சுத்தம் செய்யாததால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி, முக்கிய சந்திப்புகளில் அடைப்பு ஏற்பட உழவர்சந்தை, பஸ் ஸ்டாண்ட் எதிரில், முருகன்கோயில் உட்பட பல்வேறு இடங்களில் ரோட்டில் கழிவுநீர் ஓடுகிறது. தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள சாக்கடைகளில் மணல்கள் குவிந்து உள்ளது. இந்நிலை நகரின் அனைத்து பகுதி யிலும் காணப்படுவதால் சுகாதாரக்கேடுடன் கொசுத்தொல்லை ஏற்படுகிறது. இதற்கு நகராட்சி நிர்வாகம் தான் நிரந்தரதீர்வு காண வேண்டும்.

Read More

‘இ-பாஸ்’ இன்றி வருகை 62 தொழிலாளர்கள் தனிமை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுப்பகுதி தனியார் மில்களில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலைபார்த்தனர். ஊரடங்கால் ஏப்ரலில் ஊருக்கு சென்றனர். தளர்வுகள் காரணமாக பீகாரை சேர்ந்த 62 தொழிலாளர்கள் பஸ் மூலம் ராஜபாளையம் வந்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அழகாபுரி செக்போஸ்ட்டில் சோதித்த போது இ-பாஸ் இல்லாமல் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கிருஷ்ணன்கோவில் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Read More

கொரோனாவுக்கு டாக்டர் பலி

ராஜபாளையம்:திரவுபதி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கோதண்டராமன் 68.இந்திய மருத்துவ சங்க கிளை தலைவராக இருந்தார். காய்ச்சலால் மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 3 நாட்களில் காய்ச்சல் ஏற்பட மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். ஜூலை 27ல் இச்சங்க கிளை பொருளாளர் டாக்டர் சாந்திலால் கொரோனாவால் இறந்த நிலையில் தற்போது இவரும் பலியாகி உள்ளார்.

Read More

மாவட்டத்தில் குறைகிறது கொரோனா தொற்று குணமடைந்தோர் 82 சதவீதமாக அதிகரிப்பு

விருதுநகர்:மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 82 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பும் குறைந்து வருகிறது. கொரோனா தொற்றால் மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலானது. மாவட்டத்தில் துவக்கத்தில் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்திலே இருந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின் பஸ் போக்குவரத்து துவங்க தொற்று பரவல் ஜெட் வேகத்தில் எகிறியது. கொரோனா பரிசோதனை முடிவுகளை தினமும் அறிவிக்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனையில் மூன்று ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் மூலம் தினமும் ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. நுாறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து தொற்று பாதித்தோர் கண்டறியப்பட்டு உடனுக்குடன் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் தொற்று பாதிப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது

Read More

‘இ-பாஸ்’ இன்றி வருகை 62 தொழிலாளர்கள் தனிமை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சுற்றுப்பகுதி தனியார் மில்களில் வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலைபார்த்தனர். ஊரடங்கால் ஏப்ரலில் ஊருக்கு சென்றனர். தளர்வுகள் காரணமாக பீகாரை சேர்ந்த 62 தொழிலாளர்கள் பஸ் மூலம் ராஜபாளையம் வந்தனர். ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அழகாபுரி செக்போஸ்ட்டில் சோதித்த போது இ-பாஸ் இல்லாமல் வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கிருஷ்ணன்கோவில் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Read More

கிடப்பில் பாலம் பணி

நரிக்குடி:டி. வேலங்குடியில் பாலம் கட்டும் பணி 8 மாதங்களுக்கு முன் தொடங்கப்பட்டது. பள்ளம் தோண்டி அப்படியே கிடப்பில் போட்டதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. விபத்து ஏற்படும் முன் பணியை முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .

Read More

இழப்பீடு கோரி ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம்: சூறாவளி காற்றில் சேதமான பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் ராஜபாளையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.விவசாய சங்க தலைவர் அய்யணன் தலைமை வகித்தார். சங்க செயலாளர் பன்னீர் செல்வம் முன்னிலை வகித்தார். இ.கம்யூ., செயலாளர் லிங்கம், முன்னாள் ஒன்றிய செயலாளர் வீராச்சாமி, வழக்கறிஞர் பகத்சிங் பங்கேற்றனர்.

Read More

புலிகள் கணக்கெடுப்பு நிறைவு

ஸ்ரீவில்லிபுத்துார்: வனஉயிரின சரணாலயத்தில் புலிகள் கணக்கெடுக்க கடந்த ஜூன் இறுதியில் 150 இடங்களில் 300 கேமராக்கள் பொருத்தபட்டது. 40 நாட்கள் கடந்தநிலையில் கேமிராக்கள் அகற்றும்பணி துவங்கியது. இதை டில்லி புலிகள் கணக்கெடுப்பு மையத்திற்கு அனுப்புவர் . அங்கு நடக்கும் ஆய்விற்கு பிறகே புலிகள் அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பது தெரியவரும்.

Read More

கடனுதவி பெற அழைப்பு

விருதுநகர்: கலெக்டர் கண்ணன் செய்திக்குறிப்பு: கொரோனா ஊரடங்கால் ஊராட்சி சுய உதவிக்குழு உறுப்பினர்கள், குடும்பத்தை சார்ந்த உறுப்பினர்களுக்கு கடனுதவி வழங்கப்பட உள்ளது. இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்கும் வகையில் வறுமை ஒழிப்பு சங்கங்கள் மூலம் ரூ.1 லட்சம் வரை வழங்கப்படுகிறது. விருதுநகர் பூமாலை வணி வளாகம் புத்தாக்க திட்ட அலுவலத்தை நேரிலோ, 04562 296307ல் தொடர்பு கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Read More

ரேஷன் கார்டு பெற அழைப்பு

சிவகாசி:வட்ட வழங்கல் அதிகாரி முனியாண்டி செய்திக்குறிப்பு: புதிய ரேஷன் கார்டிற்காக தாலுகா அலுவலகத்தில் ஜன., முதல் மார்ச் வரை மனு செய்தவர்களுக்கு ரேஷன் கார்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி 800 மனுதாரர்களுக்கு புதிய கார்டு வழங்கப்பட உள்ளது, என தெரிவித்துள்ளார்.

Read More