கலங்கப்படுத்தும் கழிவுகள்; சிரமத்தில் ஸ்ரீவி., மக்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சியின் பல்வேறு பகுதிகளில் கழிவுகளால் சாக்கடைகள் அடைப்பட கொசுத்தொல்லை , துர்நாற்றத்தை அணுபவிக்கும் நிலையில் பொதுமக்கள் உள்ளனர்.

நகரின் 33 வார்டு சாக்கடைகள் வடமலைக்குறிச்சி, செங்குளம், பெரியகுளம் கண்மாய் நீர்வரத்து பாதைகளுடன் இணையும் வகையில் உள்ளது. இவற்றை தினசரி சுத்தம் செய்யாததால் ஆங்காங்கே கழிவுகள் தேங்கி, முக்கிய சந்திப்புகளில் அடைப்பு ஏற்பட உழவர்சந்தை, பஸ் ஸ்டாண்ட் எதிரில், முருகன்கோயில் உட்பட பல்வேறு இடங்களில் ரோட்டில் கழிவுநீர் ஓடுகிறது.

தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் உள்ள சாக்கடைகளில் மணல்கள் குவிந்து உள்ளது. இந்நிலை நகரின் அனைத்து பகுதி யிலும் காணப்படுவதால் சுகாதாரக்கேடுடன் கொசுத்தொல்லை ஏற்படுகிறது. இதற்கு நகராட்சி நிர்வாகம் தான் நிரந்தரதீர்வு காண வேண்டும்.

Related posts

Leave a Comment