கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

விருதுநகர்:விருதுநகர் ரயில்வே பீடர் ரோடு நாமத்வார் பிரார்த்தனை கூட்டத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சுவாமி கிருஷ்ணருக்கு விசேஷ அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாகவத பாராயணம் பாடப்பட்டது.

இதோடு வரும் 10 நாட்களுக்கு விழா நடக்க உள்ளது. மாவட்டத்தில் பல கோயில்களில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்டதோடு வீடுகள் தோறம் கிருஷ்ணரை அலங்கரித்து சிறப்பு வழிப்பாடு நடத்தப்பட்டது. குழந்தைகளும் கிருஷ்ணர் வேடமிட்டு குதுகலித்தனர். ஸ்ரீவில்லிபுத்துார்: லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைபள்ளியில் தாளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கிருஷ்ணஜெயந்தி நடந்தது. முதல்வர் முருகன், துணைமுதல்வர் திவ்யநாதன் பங்கேற்றனர்.

Related posts

Leave a Comment