மாவட்டத்தில் குறைகிறது கொரோனா தொற்று குணமடைந்தோர் 82 சதவீதமாக அதிகரிப்பு

விருதுநகர்:மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்து குணமடைந்தோர் எண்ணிக்கை 82 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பும் குறைந்து வருகிறது.

கொரோனா தொற்றால் மார்ச் 25 முதல் ஊரடங்கு அமலானது. மாவட்டத்தில் துவக்கத்தில் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்திலே இருந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பின் பஸ் போக்குவரத்து துவங்க தொற்று பரவல் ஜெட் வேகத்தில் எகிறியது.

கொரோனா பரிசோதனை முடிவுகளை தினமும் அறிவிக்கும் வகையில் அரசு தலைமை மருத்துவமனையில் மூன்று ஆர்.டி.பி.சி.ஆர்., கருவிகள் மூலம் தினமும் ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டது. நுாறு இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைத்து தொற்று பாதித்தோர் கண்டறியப்பட்டு உடனுக்குடன் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் தொற்று பாதிப்பும் படிப்படியாக குறைந்து வருகிறது

Related posts

Leave a Comment