களையிழந்த முளைப்பாரி

சத்திரப்பட்டி:சத்திரப்பட்டியில் ஆடி இறுதியில் கோயில்களில் முளைப்பாரி திருவிழா நடக்கும். விரதம் இருக்கும் பெண்கள் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்று துரைமட கிணற்றில் கரைப்பர். கண்ணாடி சப்பரத்தில் அம்மன் வீதியுலாவும் நடக்கும் .

தற்போது கொரோனா ஊரடங்கால் சத்திரப்பட்டி, சமுசிகாபுரம் பகுதி தெருக்களில் உள்ள அம்மன் கோயில்கள் முன்பு பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்தனர். முளைப் பாரி ஊர்வலம் நடத்தவில்லை. விமரிசையாக நடக்கும் இம்முறை எளிமையாக நடத்தப்பட்டது.

Related posts

Leave a Comment