கொட்டமடிக்கும் கொசுக்கள் ரண வேதனையில் ராஜபாளையம் தென்காசி சாலை மக்கள்

ராஜபாளையம்:சாக்கடை மேல் அமைக்கப்பட்ட தரைப்பாலத்தில் கழிவுகள் தேங்க கொசு உற்பத்தி கூடமாக மாறி வருவதால் ராஜபாளையம் தென்காசி சாலை பகுதி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.

சஞ்சீவி மலைப்பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் நகர்ப்பகுதியின் மேற்கு பகுதியை கடக்கும் நெடுஞ்சாலையில் தடை ஏற்பட இதை சரிப்படுத்தும் விதமாக தரைப்பாலம் அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது.இதன் படி அரசு மகப்பேறு மருத்துவமனை, காந்தி சிலை ரவுண்டானா, ரைஸ் மில் ரோடு, கலைமன்றம் பகுதியில் தரப்பாலம் அமைக்கப்பட்டது.

இங்கிருந்து கழிவு நீர் வெளியே செல்ல போதிய வடிகால் வசதி செய்யாததால் பெருமழையில் கழிவு நீர் மொத்தமாக வெளியேறும் சூழல் ஏற்பட்டு வருகிறது. இதனால் கொசு உற்பத்தி கூடமாக மாறி வருகிறது. பல ஆண்டுகளாக தொடரும் இப்பிரச்னையை சரி செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment