முன்னாள் வீரர்களோட அனுபவத்தை வேஸ்ட் பண்ணக்கூடாது.. பிசிசிஐ கூட்டத்தில் டிராவிட் கருத்து

மும்பை : முன்னாள் வீரர்களின் அனுபவங்களை மாநில அணிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேசிய கிரிக்கெட் கழகத்தின் தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார். பிசிசிஐ சார்பில் மாநில கிரிக்கெட் சங்கங்களின் செயலாளர்கள், கிரிக்கெட் செயல்பாட்டு தலைவர்கள் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற வெபினார் நடைபெற்றது. என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட், பிசிசிஐ -என்சிஏ கல்வித் தலைவர் சுஜித் சோமசுந்தர் மற்றும் பயிற்சியாளர் ஆஷிஷ் கௌசிக் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

பல்வேறு விஷயங்கள் ஆலோசனை பிசிசிஐ சார்பில் வெபினார் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப்பட்ட இந்தக் கூட்டத்தல் என்சிஏ தலைவர் ராகுல் டிராவிட், பிசிசிஐ -என்சிஏ கல்வித் தலைவர் சுஜித் சோமசுந்தர் மற்றும் பயிற்சியாளர் ஆஷிஷ் கௌசிக் ஆகியோர் பங்கேற்று விவாதங்களை மேற்கொண்டனர்.

பயன்படுத்திக் கொள்ள டிராவிட் ஆலோசனை மேலும் இந்த கூட்டத்தில் மாநில கிரிக்கெட் சங்கங்களின் செயலாளர்கள் மற்றும் கிரிக்கெட் செயல்பாட்டு தலைவர்களும் பங்கேற்று விவாதங்களை மேற்கொண்டனர். கூட்டத்தில் பேசிய ராகுல் டிராவிட் மாநில சங்கங்கள், முன்னாள் வீரர்களின் அனுபவங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், அவர்களின் அனுபவங்கள் வீணாக விடக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

இரண்டு விதமாக அளிக்க ஆலோசனை கூட்டத்தில் வீரர்களின் பிட்னஸ் டேட்டா மற்றும் மீண்டும் பயிற்சிகளை துவக்குவது உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில வீரர்களுக்கு நேரிடையாகவும் வீடியோக்கள் மூலமாகவும் இரண்டுவிதமான பயிற்சிகளை துவங்குவது குறித்தும் விவாதம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டேட்டாக்களை சேகரிக்க உத்தரவு கூட்டத்தில் பேசிய கௌசிக், வீரர்களுக்கு பிட்னஸ் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகளை அளிப்பது குறித்து பேசியதாக கூறப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு பயிற்சியை அதிகப்படுத்துவதன்மூலம் பிட்னஸ் பயிற்சிகளை குறைக்கலாம் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். மேலும் வீரர்களின் திறன் குறித்த டேட்டாக்களை மாநில பயிற்சியாளர்கள் சேகரிக்கவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment