ருசிக்க துாண்டும் கர கர காரச்சேவு

விருதுநகர்

தின்பண்டங்கள் வரிசையில் திருநெல்வேலி அல்வா, திருப்பதி லட்டு, திண்டிவனம் பலாப்பழம், கோவில்பட்டி கடலை மிட்டாய் என பட்டியல் நீளமானது. இந்த வரிசையில் சாத்துார் காரச்சேவு ருசி பிரியர்களின் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.

ஓமப்பொடி, பெருங்காயம், மிளகாய்ப்பொடி, மிளகு, சீரகம், பூண்டு, நயம் கடலை மாவு, கடலை எண்ணெய் கலவையில் தயாரிக்கப்படும் இச்சேவு மொறு மொறு சுவையை கொண்டுள்ளது. இதில் கலந்திருக்கும் காரம் நாவில் பட்டதும் காராச்சேவை ஒருபிடி பிடிக்க வேண்டும் என மனம் அலை பாய்கிறது.

பிரத்யேக சுவையை கொண்டுள்ள இக்காரச்சேவு உள்ளூர் வியாபாரிகளால் மொத்தமாக கொள்முதல் செய்து தமிழகம், வெளி மாநிலங்கள் ,நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. குறைந்த பட்சம் மூன்று வாரங்களுக்கு கெடாமலும் சுவை மாறாலும் இருப்பதால் மவுசு குறையவில்லை.

இதில் கூட நைஸ், பெருவெட்டு, மண்டை வெல்லம் இனிப்பு சேவு, கருப்பட்டி இனிப்பு சேவு, சீனி இனிப்பு சேவு என சேவுகளை வகைப்படுத்தி பக்குவமாக தயாரித்து வழங்குவது சாத்துார் பலகாரம் தயாரிப்பாளர்களுக்கே உகந்த கைப்பக்குவம் எனலாம்.

கடலை எண்ணெய் சேவு கிலோ ரூ.240. ரீபைண்ட் ஆயில் சேவு ரூ.200 என இரு வேறு விலைகளில் விற்கப்படுகிறது. இதிலும் கடலை எண்ணெய் சேவு துாக்கலான ருசியை தன்னகத்தே கொண்டுள்ளது.


Related posts

Leave a Comment