42 வருடமாகிறது.. என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை.. ராதிகாவுக்கு பாரதிராஜா வாழ்த்து!

சென்னை: நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் தடம் பதித்து 42 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு அவரை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய இயக்குநரா பாரதிராஜா வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகை ராதிகா 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான கிழக்கே போகும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். அந்தப் படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவரை பாஞ்சாலி கதாப்பாத்திரத்தில் அறிமுகப்படுத்தினார்.

இந்தப் படத்தில் சுதாகர், கவுண்டமணி, காந்திமதி என பலர் நடித்தனர். இந்தப் படத்தில் நடிகை ராதிகாவின் நடிப்பு ஒரு அறிமுக நடிகை என்றே சுவடே இல்லாமல் இருக்கும்.

பலருடனும் ஜோடி

பலருடனும் ஜோடி அதன்பிறகு தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்தார் ராதிகா. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள, கன்னடம், இந்தி என மற்ற மொழியிலும் பல படங்களில் நடித்து வருகிறார்

விருதுகள் குவிப்பு.. இதுவரை 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராதிகா. சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் ராதிகா, தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து வருகிறார். சீரியல்களை தயாரித்தும் வருகிறார். ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார் நடிகை ராதிகா.

பாரதிராஜா வாழ்த்து இந்நிலையில் நடிகை ராதிகா கடந்த 10 ஆம் தேதியுடன் தமிழ் சினிமாவில் தனது 42 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனை முன்னிட்டு பலரும் நடிகை ராதிகாவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை ராதிகாவை சினிமாவில் அறிமுகப்படுத்திய அவரது குருவான இயக்குநர் பாரதிராஜா நெகிழ்ச்சி பொங்க வாழ்த்து கூறியுள்ளார்

என் பாஞ்சாலியின் பயணம்.. இதுகுறித்து அவர் டிவிட்டியிருப்பதாவது: என் இனிய தமிழ் மகளே, கிழக்கே போகும் ரயிலில் பாஞ்சாலி என்கின்ற 16 வயது ஒரு மழலையை ஏற்றி கொடி அசைத்து பயணிக்க வைத்தேன்.. 42 வருடமாகிறது என் பாஞ்சாலியின் பயணம் இன்னும் நிற்கவில்லை..

Related posts

Leave a Comment