சென்னையில் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு- பிற மாவட்டங்களில் தொடர்ந்து விஸ்வரூபம்!

சென்னை: சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 980 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தேனி உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இன்றும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா பாதிப்பில் தமிழகம் இந்திய அளவில் 2-வது இடத்தில் இருந்து வருகிறது. ஆனால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் தமிழகம் 4-வது இடத்தில்தான் இருக்கிறது.

Chennai Records 980 Positivies for Coronavirus on Today- Dist. wise Report

தமிழகத்தில் சென்னையில் ஆயிரக்கணக்கில் கொரோனா பாதிப்பு இருந்த நிலை மாறி இருக்கிறது. அதேநேரத்தில் பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாகவும் உள்ளது.

தமிழகத்தில் இன்று மாவட்ட அளவில் கொரோனா பாதிப்பு விவரம்: அரியலூர் 76 செங்கல்பட்டு 453 சென்னை- 989 கோவை- 289 கடலூர்- 258 தருமபுரி- 21 திண்டுக்கல் – 141 ஈரோடு – 50 கள்ளக்குறிச்சி- 86 காஞ்சிபுரம் – 243 கன்னியாகுமரி – 186 கரூர்- 40 கிருஷ்ணகிரி- 9 மதுரை- 151 நாகப்பட்டினம் – 71

நாமக்கல் – 47 நீலகிரி – 7 பெரம்பலூர்- 31 புதுக்கோட்டை- 131 ராமநாதபுரம்- 60 ராணிப்பேட்டை- 57 சேலம் – 173 சிவகங்கை – 65 தென்காசி – 138 தஞ்சாவூர்- 154 தேனி- 286 திருப்பத்தூர்- 64 திருவள்ளூர்- 390 திருவண்ணாமலை- 152 திருவாரூர் – 27 தூத்துக்குடி- 103

நெல்லை- 189 திருப்பூர்- 64 திருச்சி – 161 வேலூர்- 143 விழுப்புரம்- 104 விருதுநகர்- 219

Related posts

Leave a Comment