Rajapalayam mla news 13-08-2020

இராஜபாளையம் தொகுதியில் 05.08.2020 அன்று பல்வேறு இடங்களில் பலத்த சூறாவளி காற்று வீசி ஆயிரக்கனக்கான ஏக்கர் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, மேலும் ஆயிரக்கனக்கான தென்னை மரங்கள் வேரோடு சாய்த்தும், பாதிக்கப்பட்ட மரங்களில் ஒரு வருடம் தேய்காய் காய்ப்பு இருக்காது என விவசாயிகள் கூறினார்கள், இதனால் விவசாயிகளுக்கு பெரும்இழப்பும் ஏற்ப்பட்டுள்ளது. இதனால் தென்னை மர விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் வருடம் வருடம் சூறாவாளி காற்றால் தென்னை, மா, வாழை மர விவசாயிகள் பாதிக்கப்படுவது தொடர் கதையாக உள்ளது , இதுபோல் கடந்த 14.07.2018 அன்று சூறாவளி கற்றால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை நானும் , அப்போது உள்ள வட்டாட்சியர் அவர்களும், வேளாண்மைத்துறை அதிகாரி அவர்களும் பார்வையிட்டு விவசாயிகளுக்கு 68 லட்சம் இழப்பீடுத் தொகையாக மதிப்பீடு தயார் செய்து, விரைவில் இழப்பீடு வழங்க வேண்டுமென சென்னையில் உள்ள வேளாண்மை துறை மற்றும் வருவாய் துறை அரசு செயலாளர் அவர்களிடம் மனு அளித்து தொடர்ந்து வலியுறுத்தி 07.02.2020 அன்று இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான அரசாணை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தும் இன்றுவரை உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆகவே விவசாயத்தையும் விவசாயிகளில் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற 2018 ம் ஆண்டும் 2020 ம் ஆண்டும் சூறாவளி காற்றால் சேதமடைந்த மரங்களுக்கான இழப்பீட்டுத் தொகையை மேலும் தாமதம் செய்யாமல் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நமது மக்கள் MLA S.தங்கப்பாண்டியன் அவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் இன்று (12.08.2020) மாலை 5 மணி அளவில் மனு அளித்தார், அதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட விவசாய சங்க செயலாளர் அம்மையப்பன் அவர்கள் கலந்து கொண்டார்.

Related posts

Leave a Comment