சுதந்திர தின வாழ்த்துகள்

நம் நாட்டின் சுதந்திரத்திற்காக போராடிய தியாகிகளின் போராட்டம் மறக்க இயலாதது. இந்தியாவின் வளர்ச்சிக்காக தங்களையே அர்ப்பணித்தவர்கள் அவர்கள்…! சுதந்திர தின வாழ்த்துகள் …

Read More

தமிழகத்தில் இன்னும் எதற்கு இ-பாஸ்…? காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கேள்வி

தமிழகத்தில் இன்னும் எதற்கு இ-பாஸ்…? காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் கேள்வி திருச்சி: மத்திய அரசே இ-பாஸ் முறை தேவையில்லை எனக் கூறிய பிறகும் தமிழகத்தில் இ-பாஸ் முறையை நீட்டித்து வருவது ஏன் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான திருநாவுக்கரசர் வினவியுள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இனியும் காலதாமதம் செய்யாமல் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய முடிவெடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Read More

IndependenceDay

பெருமை மிகுந்த நம் நாட்டின் 74 வது சுதந்திர தினத்தில் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #IndependenceDay பெருமை மிகுந்த நம் நாட்டின் 74 வது சுதந்திர தினத்தில் அனைவருக்கும் எனது இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். #IndependenceDay

Read More

கொரோனா பரவல்.. தமிழகம் முழுக்க சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 5835 கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் ஏற்பட்டது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 320355 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இப்படி கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நாளை நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்ள மாட்டார். அதேபோல் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நாளை மாலை இவர் கொடுக்க இருந்த டீ விருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு…

Read More

வெற்றிக்கு அருகே வந்த வீனஸ்.. போராடி வீழ்த்திய செரீனா வில்லியம்ஸ்.. பரபர டென்னிஸ் போட்டி!

லெக்ஸிங்க்டன் : டாப் ஸீட் ஓபன் எனும் புதிய டென்னிஸ் தொடரில் தன் மூத்த சகோதரி வீனஸ் வில்லியம்ஸ்-ஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார் செரீனா வில்லியம்ஸ். இந்தப் போட்டியில் ஒரு கட்டத்தில் வீனஸ் வில்லியம்ஸ் வெற்றிக்கு அருகே இருந்தார். எனினும், செரீனா வில்லியம்ஸ் போராட்டத்தை வெளிப்படுத்தி வென்றார். டாப் ஸீட் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில், லெக்ஸிங்க்டன் நகரில் நடைபெறுகிறது. அமெரிக்க ஓபன் தொடருக்கு முன்னர் நடக்கும் டென்னிஸ் தொடர் என்பதால் அதற்கான முன்னோட்டமாக இந்த தொடர் அமைந்தது. கடந்த பிப்ரவரி முதல் டென்னிஸ் போட்டிகளில் ஆடாமல் இருந்த செரீனா வில்லியம்ஸ் இந்த தொடரை பயிற்சிக் களமாக பயன்படுத்திக் கொண்டார். முதல் சுற்றில் பெர்னார்டா பேராவை 4 – 6, 6 – 4, 6 – 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்…

Read More

தந்தை கொலை; 5 ஆண்டுக்கு பின் மகன் கைது

காரியாபட்டி, அருப்புக்கோட்டை அருகே தந்தையை கொன்று காணாமல் போனதாக நாடகமாடிய மகனை 5 ஆண்டுகளுக்கு பின் போலீசார் கைது செய்தனர்.வெள்ளையாபுரத்தை சேர்ந்தவர் அக்கி ரொட்டி. இவரது மகன் நாராயணசாமி மாற்றுத்திறனாளி. காரியாபட்டி பெட்ரோல் பங்கில் வேலை செய்து வருகிறார். 2015ல் தந்தை காணாமல் போனதாக காரியாபட்டி போலீசில் புகார் கொடுத்தார். 5ஆண்டுக்கு பின் தீவிர மாக விசாரித்த நிலையில் விசாரித்தபோது தந்தைக்கு வயதாக வீட்டுக்குள்ளே அசுத்தம் செய்ததால் பராமரிக்க முடியாமல் கொலை செய்தேன். தென்காசியில் உள்ள நண்பர்களை வரவழைத்து சுக்கிலநத்தம் முள்காட்டுக்குள் எரித்ததாக கூறினார். இவரை இன்ஸ்பெக்டர் செல்வராஜ், எஸ்.ஐ.,க் கள் வினோத்குமார், தமிழழகன் கைது செய்து உதவிய நபர்களையும் தேடி வருகின்றனர்.

Read More

கலங்கலான குடிநீரால் கலக்கம் அவதியில் ஆயிரங்கண் மாரியம்மன்தெற்கு மக்கள்

அருப்புக்கோட்டை, கலங்கலாக வரும் குடிநீரால் கலக்கம், பேவர் பிளாக் பெயர்ந்த நிலையில் பள்ளமான ரோடு என அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் தெற்கு பகுதி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.இப்பகுதியில் ரோடு அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் தெருக்களில் நடக்க முடியாதபடி பள்ளம் மோடாக உள்ளது. இதோடு ரோட்டின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் தரமற்ற பணியால் ஆங்காங்கு மேடும், பள்ளமாக உள்ளது. நகராட்சி குடிநீரோ 20 நாட்களுக்கு ஒரு முறையே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விடப்பட்ட குடிநீரும் கலங்கலாக கருப்பு கலரில் உள்ளதாக பெண்கள் புகார் கூறினர். இப்பகுதி பள்ளி கேட் அருகே இரவு நேரங்களில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் அவ்வழியே செல்வோரை மிரட்டுகின்றனர். தெருக்களில் சாக்கடை குறுகியும், உடைந்தும் உள்ளன.இதனால் கழிவு நீர் வெளியேற முடியாமல் உள்ளது.

Read More

ஆந்திரா செல்லும் கொரோனா கவச உடைகள் விருதுநகரில் ஓவன் துணி வகையில் தயார்

விருதுநகர்கொரோனா காலகட்டம் நமக்கு பல்வேறு வாழ்க்கை முறைகளை கற்று தந்துள்ளது. மாத ஊதியம் பெற்றவர்களை சொந்த வியாபாரம் செய்யவும், சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்த இளைஞர்களை தொழில் முனையவும் பொறுப்பு தந்துள்ளது. நோய் என்பதை தாண்டியும் நம் வாழ்வியலில் கொரோனா தந்த மாற்றம் இன்னும் பல ஆண்டுகளுக்கு போற்றக்கூடிய பாடமாகவே இருக்கும். மாஸ்க்குகள் பிரபலமாகும் என்றும், விதவிதமாக நாம் அணிவோம் என்றும் நாம் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. ஊரடங்கில் கடைகள் திறக்காமல் இருந்த போது தையல் தொழில் தெரிந்தவர்கள் மாஸ்க் தைத்து சுயமாக விற்றனர். இது அவர்களுக்கு பெரும் பொருளாதார உதவியாக இருந்தது. இன்றும் மாஸ்க்குகள் தைத்து திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதே போன்று கொரோனா வார்டில் மருத்துவ பயன்பாட்டிற்கு அணியப்படும் பாதுகாப்பு கவச உடைகள் தயாரிப்பும் பிரபலமடைந்து வருகிறது. விருதுநகர்…

Read More

விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயார்

ராஜபாளையம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகள் செய்வதற்கான பணிகள் ராஜபாளையத்தில் நடந்து வருகின்றன.இங்குள்ள மாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில் விநாயகர் சதுர்த்தி திருவிழா நலத்திட்ட உதவிகளுடன் ஒரு வாரம் நடைபெறும் நிலையில் தற்போது கொரோனாவால் சமூக இடைவெளியுடன் 2 நாட்கள் மட்டும் நடக்க உள்ளது. இதற்கான சிலைகளை தஞ்சாவூர் ஸ்தபதிகள் குழுவினர் செய்கின்றனர்.

Read More