ஆந்திரா செல்லும் கொரோனா கவச உடைகள் விருதுநகரில் ஓவன் துணி வகையில் தயார்

விருதுநகர்கொரோனா காலகட்டம் நமக்கு பல்வேறு வாழ்க்கை முறைகளை கற்று தந்துள்ளது. மாத ஊதியம் பெற்றவர்களை சொந்த வியாபாரம் செய்யவும், சமூக வலைதளங்களில் மூழ்கி கிடந்த இளைஞர்களை தொழில் முனையவும் பொறுப்பு தந்துள்ளது. நோய் என்பதை தாண்டியும் நம் வாழ்வியலில் கொரோனா தந்த மாற்றம் இன்னும் பல ஆண்டுகளுக்கு போற்றக்கூடிய பாடமாகவே இருக்கும். மாஸ்க்குகள் பிரபலமாகும் என்றும், விதவிதமாக நாம் அணிவோம் என்றும் நாம் கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. ஊரடங்கில் கடைகள் திறக்காமல் இருந்த போது தையல் தொழில் தெரிந்தவர்கள் மாஸ்க் தைத்து சுயமாக விற்றனர். இது அவர்களுக்கு பெரும் பொருளாதார உதவியாக இருந்தது. இன்றும் மாஸ்க்குகள் தைத்து திருப்பூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். அதே போன்று கொரோனா வார்டில் மருத்துவ பயன்பாட்டிற்கு அணியப்படும் பாதுகாப்பு கவச உடைகள் தயாரிப்பும் பிரபலமடைந்து வருகிறது. விருதுநகர் என்.ஜி.ஓ., காலனியில் ஹைடெக் அப்பேரல்ஸ் நிறுவன உரிமையாளர் பாலசுப்பிரமணியன் இதை தயாரித்து வருகிறார். நான் ஓவன் துணி வகையில் கவச உடைகள், உசேரி துணியில் மாஸ்க்குகள் தயாரிக்கப்படுகின்றன. இதன் மூலம் கிட்டதட்ட 40 பேர் கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் பெற்று தொழில்புரிகின்றனர். நான் ஓவன் துணி வகைகள் மூலம் கொரோனா வார்டின் சிகிச்சை பணியில் இருக்கும் போது எளிதில் மூச்சு விட வசதியாகவும், கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு அளிக்கும் விதமாகவும், வியர்வை வெளியேற்றத்தை முறைப்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதை மொத்தமாக தயார் செய்து திருப்பூர், கோயம்புத்துார் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் செல்கிறது. சில நேரங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது.

Related posts

Leave a Comment