கலங்கலான குடிநீரால் கலக்கம் அவதியில் ஆயிரங்கண் மாரியம்மன்தெற்கு மக்கள்

அருப்புக்கோட்டை, கலங்கலாக வரும் குடிநீரால் கலக்கம், பேவர் பிளாக் பெயர்ந்த நிலையில் பள்ளமான ரோடு என அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் தெற்கு பகுதி மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர்.இப்பகுதியில் ரோடு அமைத்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால் தெருக்களில் நடக்க முடியாதபடி பள்ளம் மோடாக உள்ளது. இதோடு ரோட்டின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள பேவர் பிளாக் தரமற்ற பணியால் ஆங்காங்கு மேடும், பள்ளமாக உள்ளது. நகராட்சி குடிநீரோ 20 நாட்களுக்கு ஒரு முறையே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விடப்பட்ட குடிநீரும் கலங்கலாக கருப்பு கலரில் உள்ளதாக பெண்கள் புகார் கூறினர். இப்பகுதி பள்ளி கேட் அருகே இரவு நேரங்களில் சமூக விரோத செயலில் ஈடுபடுவோர் அவ்வழியே செல்வோரை மிரட்டுகின்றனர். தெருக்களில் சாக்கடை குறுகியும், உடைந்தும் உள்ளன.இதனால் கழிவு நீர் வெளியேற முடியாமல் உள்ளது.

Related posts

Leave a Comment