காற்றில் முறிந்த மின் கம்பங்கள் : தண்ணீரின்றி கருகும் பயிர்கள்

ராஜபாளையம், ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரத்தில் காற்றால் மின் கம்பங்கள் உடைந்த நிலையில் இதை சீரமைக்காததால் மின் மோட்டாரை இயக்க முடியாது கிணற்று பாசன பயிர்கள் தண்ணீரின்றி கருகிவருகின்றன. இப்பகுதியில் 100 ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளது. வாழை, தென்னை, மா பிரதான விவசாயம் நடக்கிறது. ஆகஸ்ட் 6 இரவு காற்றால் வாழை, தென்னைகள் முறிந்தன. மரங்கள் மின் கம்பிகளின் மீது விழுந்ததில் 3 கம்பங்களும் ஒடிந்து விழுந்துள்ளது.இதனால் இப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் மின்மோட்டாரை இயக்க முடியாத நிலை உள்ளது. ஒரு வாரம் கடந்தும் சீரமைக்காததால் காற்றின் பாதிப்பில் தப்பிய வாழை உள்ளிட்ட பயிர்கள் தண்ணீர் இன்றி காய்கின்றன.

Related posts

Leave a Comment