கொரோனா பரவல்.. தமிழகம் முழுக்க சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து.. தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 5835 கொரோனா கேஸ்கள் தமிழகத்தில் ஏற்பட்டது. தமிழகத்தில் மொத்த கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை 320355 ஆக உயர்ந்துள்ளது.

Grama Sabha meet on Independence day canceled due to COVID 19 surge in TN

தமிழகத்தில் இப்படி கொரோனா கேஸ்கள் உயர்ந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நாளை நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொள்ள மாட்டார். அதேபோல் தமிழக அரசியல் கட்சிகளுக்கு நாளை மாலை இவர் கொடுக்க இருந்த டீ விருந்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் சுதந்திர தின கிராமசபைக் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. கொரோனா பரவல் உள்மாவட்டங்களில் அதிக உள்ள நிலையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.பொதுவாக குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய முக்கிய தினங்களில் கிராமசபை கூட்டம் நடக்கும்.

அதேபல் மே 1, அக்டோபர் 2 ஆகிய தேதிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறுவது வழக்கம்.கொரோனா தொற்று அதிக உள்ளதால் தமிழகத்தில் நாளை கிராமசபைக் கூட்டத்தை நடத்த தேவையில்லை என்று முதல்வர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

Leave a Comment