சென்னையில் டாஸ்மாக் கடைகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் திறப்பு.. டோக்கன் சிஸ்டம்!

சென்னை: சென்னையில் மதுக்கடைகள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது டாஸ்மாக் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் 07.05.2020 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டது. சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் 18.08.2020 முதல் இயங்கும். மேலும் மால்கள் மற்றும் நோய்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக்கடைகள் இயங்காது. மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்ககன் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான…

Read More

தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய இ பாஸ் நடைமுறை-விண்ணப்பித்தாலே கிடைக்கும்!

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் அமலுக்கு வருகிறது புதிய இ பாஸ் நடைமுறை. விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் வழங்கும் எளிதாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளன. ஆனாலும் மாவட்டங்கள் விட்டு மாவட்டங்கள் செல்ல இ பாஸ் நடைமுறையில் உள்ளது. ஆனால் இ பாஸ் பெறுவது என்பது பெரும் போராட்டமாக இருக்கிறது. இ பாஸை முன்வைத்து முறைகேடுகள் நடைபெறுகின்றன என்பதும் புகார். இதனால் இ பாஸ் பெறுவதில் தளர்வுகள் அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது நாளை முதல் அமலுக்கு வருகிறது. விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் வகையில் தளர்வுகள் அமல்படுத்தப்படுகின்றன. இ பாஸுக்கு விண்ணப்பிக்கும் போது ஆதார், குடும்ப அட்டையுடன் செல்போன் எண்ணை பதிவு செய்தால் உடனே இ பாஸ் கிடைக்கும் என அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

Read More

#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

15.08.2020 விருதுநகர் மாவட்டத்தில் 74 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் திரு. கண்ணன் இ.ஆ.ப அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பூ.பெருமாள் இ.கா.ப அவர்களுடன் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கினார்கள்.#virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs

Read More

#MSDhoni | #Retirement | #Thala | #Mahi | #DhoniRetirement | #MSDhoniretires | #ShoaibAkhtar

“தோனி ஒரு சகாப்தம், வந்தார்… விளையாடினார்…. வென்றார்… சென்றார்… அவர் தான் தோனி. What a legend” – பாகிஸ்தான் வேகபந்து வீச்சாளர் சோயிப் அக்தர் புகழாரம்!

Read More

நேற்று அப்பாவின் மரணம்.. இன்று காலை யூனிபார்மில் சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி.. மிரண்ட நெல்லை

நெல்லை: நேத்து ராத்திரிதான் அப்பா இறந்துட்டாரு.. ஆனாலும் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி யூனிபார்முடன் மிடுக்காகவும், கம்பீரமாகவும் வந்து நின்று ஒரு சல்யூட் வைத்ததுமே நெல்லை மாவட்டமே மிரண்டு விட்டது! நெல்லை பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் இன்று நடந்த சுதந்திர தின நிகழ்ச்சி சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.. கலெக்டர் ஷில்பா பிரபாகர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையையும் ஏற்று கொண்டார். ஒவ்வொருவராக வந்து தங்கள் மரியாதையை தொடங்கினர்.. அப்போதுதான் அங்கு வந்து மிடுக்காக நின்று சல்யூட் வைத்த இன்ஸ்பெக்டர் மகேஸ்வரியை பார்த்ததும் கலெக்டர் முதல் எல்லோருமே உறைந்து போய்விட்டனர்,.. இதற்கு காரணம்.. மகேஸ்வரியின் அப்பா நேற்று ராத்திரி இறந்துவிட்டார்.. அவர் பெயர் நாராயணசுவாமி.. 83 வயதாகிறது.. உடம்பு சரியில்லாமல் இருந்தவர் நேற்றிரவு இறந்துவிட்டார். மகேஸ்வரி அப்பா இறந்த தகவல் மகேஸ்வரிக்கு தெரியப்படுத்தப்பட்டது.. கதறி கதறி அழுதார்..…

Read More

இவ்வளவு தான் என் கிரிக்கெட் பயணம்.. தோனி தானே வெளியிட்ட ஓய்வு வீடியோ.. கண்கலங்க வைக்கும் காட்சிகள்!

சென்னை : கிரிக்கெட் உலகில் ஜாம்பவானாக வலம் வந்த முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி ஆகஸ்ட் 15 அன்று ஓய்வை அறிவித்தார். தோனியின் இந்த திடீர் ஓய்வு அறிவிப்பு கிரிக்கெட் உலகை அதிர வைத்தது. அவர் ஓய்வு அறிவிப்புடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தோனியின் ஒட்டு மொத்த கிரிக்கெட் வாழ்வும் அடங்கி உள்ளது. அதன் இறுதி வினாடிகள் ரசிகர்களை கண்கலங்க வைப்பதாக உள்ளது. தோனியின் பயணம் தோனி 2004இல் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். 2007இல் இந்திய அணியின் கேப்டன் ஆனார். பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென 2014இல் ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20யில் ஆடி வந்தார். ஓய்வு 2019 உலகக்கோப்பை தொடருக்கு பின் இந்திய அணியில் தோனி இடம் பெறவில்லை.…

Read More

Udhayanidhi Stalin

இந்திய ஒன்றியத்தின் 74வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் என் வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய பெருந்தொற்றிலிருந்து நம்மை விடுவிக்க இன்னொரு சுதந்திர போரை நடத்தும் மருத்துவர்-செவிலியர்-தூய்மைப்பணியாளர் உள்ளிட்ட கொரோனா தடுப்பு முன்கள பணியாளர்களை இந்நாளில் போற்றுவோம்!

Read More