இருக்கன்குடி கோயில் ஆடி விழா

சாத்துார்:சாத்துார் இருக்கன்குடி மாரியம்மன் கோயில் ஆடி கடைசி வெள்ளி பெருந்திருவிழாவை ஆன்லைனில் பார்த்து ஏராள மான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இக்கோயில் திருவிழா ஊரடங்கால் அம்மன் வீதி உலா ரத்து செய்யப்பட்டு பக்தர்களின்றி கோயிலில் நடந்த சிறப்பு அபிஷேகம், பூஜைகள் இந்து சமய அறநிலையத்துறை வெப்சைட், யுடியூப் சேனலில் ஒளிபரப்பானது. இதனிடையே அதிகாலை முதல் கோயிலுக்கு பக்தர்கள் டூவீலர்களில் வந்தனர். போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். சிலர் காட்டுப்பகுதியில் பொங்கல் வைத்து, முடிகாணிக்கை செலுத்தினர். இருந்தும் அம்மனை தரிசிக்க முடியாது ஏமாற்றத்துடன் திரும்பினர்.

விருதுநகர்: மாரியம்மன் கோயிலில் நேற்று கடைசி ஆடி வெள்ளி என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் குவிந்தனர்.மூன்று பேர் வீதம் சமூக இடைவெளியை பின்பற்றி கோயிலுக்கு முன் தீபம், சூடம் ஏற்றி வழிபாடு நடத்த போலீசார் அனுமதித்தனர். மாவிளக்கு ஏற்றியும் வழிபாடு நடத்தினர். வெளியிடங்களில் மொட்டையடித்து நேர்த்திக்கடனும் செலுத்தினர். இது போல் வெயிலுகந்தம்மன் கோயில் முன்பும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். காளியம்மன் கோயில்கள் திறக்கப்பட்டிருந்தால் அங்கும் வழிபாடு நடத்தினர்.

Related posts

Leave a Comment