செண்டுப்பூ விளைச்சல் அமோகம்: விவசாயிகள் மகிழ்ச்சி

விருதுநகர்:விருதுநகரில் செண்டுப்பூ அமோக விளைச்சலால் மலர் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.வீரிய ஒட்டு ரகமான செண்டுப்பூ நாற்றுகளை ஒசூரு தனியார் பண்ணைகளில் இருந்து மலர் சாகுபடி விவசாயிகள் வாங்கி வருகின்றனர்.

நாற்று நட்டு நாற்பதாவது நாளில் இருந்து தொடர்ந்து 60 முதல் 70 நாள் வரை செண்டுப்பூ விளைச்சல் அமோகமாக இருக்கும். இயற்கை அடிஉரம், பூச்சிக்கொல்லி விரட்டியாக பஞ்ச கவ்யா பயன்படுத்தினால் மகசூல் இரட்டிப்பாகும். இதனால் ஏக்கருக்கு வாரம் தோறும் 100 முதல் 120 கிலோ பூக்கள் கிடைக்கும்.

விருதுநகர் அருகே சித்துாரை சேர்ந்த மலர் சாகுபடி விவசாயி செந்தில்குமார் கூறியதாவது: செண்டுப்பூ நாற்று ஒன்றின் விலை போக்குவரத்து செலவு உட்பட ரூ.2.50 விற்கின்றனர். 25 சென்ட் நிலத்தில் செண்டுப்பூ சாகுபடி செய்கிறேன். முதல் அறுவடை முடிந்துள்ளது. இரண்டாவது அறுவடைக்கு பூக்கள் பூத்துள்ளன. கொரோனா ஊரடங்கால் சுப காரியங்கள் நடக்கவில்லை. எனினும் ஆடியை முன்னிட்டு சிறு கோயில்களில் விழாக்கள் நடப்பதால் செண்டுப்பூ விற்பனையாகி வருவது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது, என்றார்.

Related posts

Leave a Comment