சென்னையில் டாஸ்மாக் கடைகள் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் திறப்பு.. டோக்கன் சிஸ்டம்!

சென்னை: சென்னையில் மதுக்கடைகள் வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது டாஸ்மாக் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர மதுபான சில்லறை விற்பனை கடைகள் 07.05.2020 முதல் திறந்திட தமிழக அரசு உத்தரவிட்டு மதுக்கடைகள் திறக்கப்பட்டது.

 tasmac shops in chennai open from august 18

சென்னை பெருநகர காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் திறக்கப்படாமல் இருந்த மதுபான சில்லறை விற்பனை கடைகள் 18.08.2020 முதல் இயங்கும். மேலும் மால்கள் மற்றும் நோய்கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருக்கும் மதுபானக்கடைகள் இயங்காது.

மதுபானக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும். நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்ககன் மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். மதுபான கடைகளுக்கு வரும் அனைவரும் முககவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் மற்றும் தனி மனித இடைவெளி கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

Leave a Comment