விருதுநகரில் 14 லட்சம் மாஸ்க்

விருதுநகர்:”ரேஷன் கடைகள் மூலமாக மாவட்டத்தில் 14 லட்சம் மாஸ்க்குகள் விநியோகிக்க உள்ளதாக ,” அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: மாவட்டத்தில் 3114 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு 1.62 லட்சம் பேருக்கு சோதனை செய்யப்பட்டது. 10,629பேர் தொற்று பாதித்து 9055 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 1432 பேரே சிகிச்சையில் உள்ளனர்.

ரேஷன் கடைகள் மூலமாக 5.72 லட்சம் பேருக்கு தலா 2 மாஸ்க்குகள் வீதம் 14 லட்சம் மாஸ்க்குகள் விரைவில் வழங்கப்பட உள்ளது,என்றார். கொரோனாவால் இறந்த ஏட்டு , கிராம உதவியாளர் வாரிசுகளுக்கு தலா ரூ.25 லட்சம் வழங்கினார். இதில் கலெக்டர் கண்ணன் தலைமை வகித்தார். எஸ்.பி.,பெருமாள் முன்னிலை வகித்தார். டி.ஆர்.ஓ., மங்களராமசுப்பிரமணியன், திட்ட இயக்குனர் சுரேஷ், சப் கலெக்டர் தினேஷ்குமார் பங்கேறறனர்.

Related posts

Leave a Comment