இது மட்டும் நடந்தால்.. இனி சிஎஸ்கே அணியிலும் தோனி ஆட மாட்டார்.. அதிர வைக்கும் தகவல்!

சென்னை : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள தோனி, ஐபிஎல் தொடரிலும் விரைவில் ஓய்வு பெறக் கூடும் என தகவல்கள் வலம் வருகின்றன. ஏற்கனவே, தோனியின் ஓய்வு அறிவிப்பால் அதிர்ச்சியில் இருக்கும் அவரது ரசிகர்களுக்கு இது மேலும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது. இந்த சீசன் ஐபிஎல் தொடரில் தோனி ஆடுவது உறுதி என்றாலும், தொடரின் முடிவில் நடக்கப் போவது பற்றித் தான் சிஎஸ்கே வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.

தோனியின் பயணம்

தோனியின் பயணம்

தோனி 2004ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆகி, சிறந்த கேப்டனாக வலம் வந்து, கிரிக்கெட்டின் தலைசிறந்த பினிஷராக பெயர் பெற்று 16 ஆண்டுகளை நிறைவு செய்து இருந்தார். கடைசியாக 2019 உலகக்கோப்பை தொடரில் அவர் ஆடினார்.

எண்ணம் ஈடேறவில்லை

இந்திய அணிக்கு கோப்பை வென்று கொடுக்க வேண்டும் என்ற அவரது எண்ணம் ஈடேறவில்லை. இந்திய அணி அரை இறுதியுடன் தோற்று வெளியேறியது. அந்தப் போட்டிக்கு பின் தோனி இந்திய அணியில் எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை.

2020 டி20 உலகக்கோப்பை

2020 டி20 உலகக்கோப்பை அடுத்து அவர் 2020 டி20 உலகக்கோப்பையில் ஆட ஆர்வமாக இருப்பதாகவும், 2020 ஐபிஎல் தொடரில் தன் பார்மை நிரூபித்து இந்திய டி20 அணியில் இடம் பெற்று உலகக்கோப்பை தொடரில் ஆடுவார் என்றும் கூறப்பட்டது. இந்திய அணிக்கு மற்றொரு உலகக்கோப்பை வென்று கொடுத்து பின் ஓய்வு பெற வேண்டும் என தோனி நினைத்து இருக்கக் கூடும்.

ஓய்வு அறிவிப்பு ஏன்? ஆனால், அதுவும் நடக்கவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பால் டி20 உலகக்கோப்பை 2021க்கு தள்ளி வைக்கப்பட்டது. ஐபிஎல் தொடரும் தாமதமாகவே நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் தொடர் துவங்கும் முன்பே தோனி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தன் ஓய்வை அறிவித்துள்ளார்.

அடுத்தகட்ட திட்டங்கள் அடுத்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் அவர் ஆட உள்ளார். ஆனால், எத்தனை ஆண்டுகள் அவர் சிஎஸ்கே அணியில் ஆடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அது குறித்து சிஎஸ்கே அணி வட்டாரத்தில் இருந்து அதிர வைக்கும் தோனியின் அடுத்தகட்ட திட்டங்கள் பற்றி கூறப்பட்டது.

அடுத்த திட்டம் என்ன? “தோனியின் இந்த ஓய்வு முடிவு எங்கே இருந்து வந்தது என்றே நமக்கு தெரியவில்லை. ஆனால், அது தான் தோனி. டி20 உலகக்கோப்பை வெற்றியுடன் அவர் ஓய்வு பெற்று இருந்தால் அது சிறப்பாக இருந்திருக்கும். ஆனால், தற்போது அவர் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் கோப்பை வென்று வெளியேற விரும்புவார்” என ஒரு சிஎஸ்கே அதிகாரி கூறி உள்ளார்.

தோனியின் உண்மையான திட்டம் “தோனி டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஐபிஎல் மூலம் தன்னை தயார்படுத்தி இருப்பார். அங்கே இருந்து முன்னேறி இருப்பார். அதுதான் தோனியின் உண்மையான திட்டம். அது எல்லாமே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுவிட்டது.” என்று தோனிக்கு நெருக்கமான வட்டாரம் கூறி உள்ளது.

சாத்தியமில்லை மேலும், டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் சில தொழில் ரீதியான திட்டங்கள் அவருக்கு வர இருந்தன. ஆனால், அது வரை அவர் ஆடுவது சாத்தியமில்லை என்பதால் அவர் தற்போது ஓய்வு பெற்று இருக்கிறார் எனவும் தகவல் கிடைத்துள்ளது.

ஓய்வு பெற்றால்.. 2020 ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி கோப்பை வென்றால் தோனி ஓய்வு பெறக் கூடும் என்பதே தற்போது கிடைத்துள்ள தகவல். ஒருவேளை தோனி ஓய்வு பெற்றாலும் சிஎஸ்கே அணியுடன் ஏதோ ஒரு வழியில் பணியில் இருப்பார் என கூறப்படுகிறது.

Related posts

Leave a Comment