மாரியப்பன் தங்கவேல்…ரோஹித் சர்மா…கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை!!

டெல்லி: பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பன், கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, குத்துச் சண்டை வீரர் விக்னேஷ் போகட், டேபிள் டென்னிஸ் சாம்பியன் மணிகா பத்ரா ஆகியோரின் பெயர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேசிய விளையாட்டு விருதுக்கான தேர்வு கமிட்டி கடந்த செவ்வாய் கிழமை ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, அர்ஜீனா விருதுக்கு விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இருந்தது. இதையடுத்து இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதன் முறையாக நான்கு விளையாட்டு வீரர்கள் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர், எம்எஸ் தோனி, விராட் கோலி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1998 ஆம் ஆண்டில் முதன் முறையாக…

Read More

அண்ணா பல்கலையில் கல்விக் கட்டணம் செலுத்த ஆக., 31 கடைசி! முதலமைச்சரிடம் புகார் என்ன ஆனது?

தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரிகள் திறக்காமலும், தேர்வுகள் நடத்தாமலும் உள்ள நிலையில், அண்ணா பல்கலைக் கழகம் தேர்வுக் கட்டணம் வசூலிப்பது குறித்து முதலமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலை.,யின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் படித்து வரும் வெளிநாட்டு வாழ் இந்திய மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கல்வி கட்டணம் செலுத்த வேண்டும் என பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. தேர்வுகள் ஒத்திவைப்பு நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, கல்வி நிறுவனங்களைத் திறக்கமுடியாத சூழல் நிலவி வரும் நிலையில், பெரும்பாலான கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்தும் அறிவித்துள்ளது. அண்ணா பல்கலைக் கழக தேர்வுகள் இதனிடையே, பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு யுஜிசி வழிகாட்டுதலின்படி, ஆண்டு இறுதித்தேர்வுகள் கட்டாயம் நடத்தப்பட…

Read More

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

தற்போது மத்திய நிதி அமைச்சர் மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் நிர்மலா சீதாராமன் 18 ஆகஸ்ட் 1959-ல் பிறந்தார். அவர் வாழ்கையில் எங்கிருந்து, எங்கு வந்திருக்கிறார் என ஃப்ரீ பிரஸ் ஜர்னஸ் பத்திரிகை, தன் வலை தளத்தில் ஒரு சுவாரஸ்ய செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. அதைப் பார்ப்போம். இதில் கூடுதல் பெருமை என்ன என்றால், இவர் தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரையில் பிறந்தவர் என்கிறது விக்கீபீடியா. சரி விஷயத்துக்கு வருவோம். முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர் 1970 – 71 கால கட்டட்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், நிதி அமைச்சராக இருந்து இருக்கிறார். ஆனால் ஒரு முழு நேர நிதி அமைச்சராக பதவி வகிக்கவில்லை. அப்படி முறையாக ஒரு கேபினெட் அமைச்சகத்தின் தொடக்கத்தில் இருந்து, முழு நேரமாக,…

Read More

நடுகல் கண்டுபிடிப்பு

அருப்புக்கோட்டை,:அருப்புக்கோட்டை அருகே குலசேகரநல்லுாரில் 16 ம் நுாற்றாண்டை சேர்ந்த நடுக்கல் கண்டறியப்பட்டது. பாண்டியநாடு பண்பாட்டு மைய ஆய்வாளர் செல்லப்பாண்டியன், வரலாற்று மாணவர் விஜயகுமார் கூறியதாவது: இந்த நடுகல் கி.பி., 16ம் நுாற்றாண்டை சேர்ந்த நவகண்டம் சிற்பமாகும். நவகண்டம் என்பது தனது நாடு போரில் வெற்றி பெற வேண்டி வீரன் ஒருவன் கொற்றவைக்கு தன்னை பலியிட்டு கொள்வதை நவகண்டம் என்பர்.இந்த சிற்பத்தில் வீரன் ஒருவன் தன் கழுத்தை தானே அறுத்து கொள்ளும் விதமாக செதுக்கியிருப்பதால் நவகண்டம் சிற்பம் என்பதை உறுதி செய்கிறது. நாயக்கர் காலத்தை சேர்ந்த நவகண்டம் சிற்பத்தை காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். இப்பகுதியில் கிடைத்த இரண்டாவது நவகண்டம் சிற்பமாகும் என்றார்.

Read More

அருப்புக்கோட்டையில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னை

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டையில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு எப்போது என மக்கள் புலம்புகின்றனர். அருப்புக்கோட்டைக்கு நகராட்சி மூலம் வைகை, தாமிரபரணி குடிநீர் விநியோகம் நடக்கிறது. தினமும் 90 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால் வைகை குடிநீர் ஆண்டுக்கு நான்கு மாதங்கள் மட்டும் தினமும் 25 லட்சம் லிட்டர் கிடைக்கிறது. தாமிரபரணி குடிநீர் தினமும் 50 லட்சம் லிட்டர் கிடைக்க வேண்டும். ஆனால் 30 லட்சம் லிட்டர் தான் கிடைக்கிறது. வைகை குடிநீர் விநியோகம் மூன்று மாதமாக நிறுத்தப்பட்டுள்ளது.தாமிரபரணி குடிநீர் தினமும் 30 லட்சம் லிட்டர் மட்டுமே கிடைப்பதால் நகரை ஏழு பிரிவாக பிரித்து பத்து நாட்களுக்கு ஒரு பகுதி வீதம் குடிநீர் வழங்கப்பட்டது. கடும் தட்டுப்பாட்டால் 20 நாட்களுக்கு ஒரு முறை விநியோகிக்கின்றனர். தாமிரபரணி குழாய் உடைப்பு, வால்வில் கசியும் குடிநீரை பெண்கள் பல மணி நேரம்…

Read More

குறைந்து வரும் நிலத்தடி நீர்

மாவட்டத்தில் குடிநீர் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். இதனால் உள்ளாட்சி நிர்வாகங்களால் சப்ளை செய்யப்படும் குடிநீர் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. கோடை காலம் முடிந்த பிறகும் கூட குடிநீர் பிரச்னை தீரவில்லை. குடம் ஒன்று ரூ.15 முதல் ரூ.20 வரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறைகேடாக நீரை உறிஞ்சுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.நிலத்தடி நீர் மட்டத்தை பொறுத்தமட்டில் சிவப்பு மண்டலம் எனும் அபாய கட்டத்தில் விருதுநகர் உள்ளது. மக்களுக்கு வழங்கும் பல லட்சம் லிட்டர் குடிநீரை தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள் மறைமுகமாக உறிஞ்சுவதை சில உள்ளாட்சி நிர்வாகங்கள் கையூட்டு பெற்று கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியாரால் அதிகப்படியாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீரால் கிணற்று பாசன விவசாயிகளும்,…

Read More

சேதமடைந்த தண்ணீர் தொட்டியால் மக்கள் தவிப்பு

சிவகாசி:சேதமடைந்த தண்ணீர் தொட்டி, எரியாத தெருவிளக்கு, குண்டும் குழியுமான ரோடு, குப்பைகளால் நிரம்பிய சாக்கடை என அடிப்படை வசதிகளின்றி சிவகாசி வடக்கு ரத வீதி மக்கள் தவிக்கின்றனர். சிவகாசி வடக்கு ரத வீதி, சுப்பரமணியம் கோயில் தெரு, வி.கே.எம்., தெரு, அரிசிகொள்வான் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குடியிருப்போர் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். வடக்கு ரத வீதியில் சாக்கடையில் குப்பைகளை கொட்டி மூடி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் துார் வாரவில்லை. மழைக் காலங்களில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து ரோட்டில் ஆறாக ஓடுகிறது. வடக்கு ரத வீதியில் சிவன் கோயில் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மது அருந்தும் ‘குடி’மகன்கள் காலி பாட்டில்கள், கழிவுகளை ரோடுகள், குடியிருப்பு பகுதிகளில் வீசுகின்றனர். குப்பைகளை குவித்து வைத்து எரிப்பதால் குடியிருப்போர் அவதிப் படுகின்றனர். வி.கே.எம்., தெருவில் மினி விசைப்பம்பு…

Read More

நாளை மின் தடை

(காலை 9:00 -முதல் மாலை 5:00 மணி) பி.எஸ்.கே.நகர், அழகை நகர், மலையடிபட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி ரோடு, அரசு மருத்துவமனை, புது பஸ்ஸ்டாண்டு, ஐ.என்.டி.யு.சி., நகர், பாரதி நகர், ஆர்.ஆர். நகர்., சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்காபுரம், கலங்காபேரி, புதுார், மொட்டமலை. ஆலங்குளளம், சங்கரமூர்த்திபட்டி, காளவாசல், கம்மாபட்டி, வலையபட்டி, மேலாண்மறைநாடு, கீழாண்மறைநாடு, ராமுத்தேவன்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, காக்கிவாடன்பட்டி, மம்சாபுரம், ஏ.லட்சுமியாபுரம், கே.லட்சுமியாபுரம், கோட்டைபட்டி. கொருக்காம்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்காபுரம், நரிக்குளம். ஆர்.ரெட்டியப்பட்டி, சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ்.திருவேங்கிடபுரம், ராமசந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சம்தவிர்த்தான், வேப்பங்குளம், என்.புதுார், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சாம்பட்டி, குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்ன

Read More

ஸ்ரீவி.,வனப்பகுதியில் வறட்சி குடிநீர், பாசன வசதி குறைவு

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் வன உயிரின சரணாலயத்தில் மழையின்றி வறண்டு காணப்படுவதால் குடிநீர், பாசன வசதி குறைந்து வருகிறது. தேவதானம், சேத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, மதுரை மாவட்டம் சாப்டூர் வரை 484 சதுர கி.மி., பரப்பளவு கொண்டது ஸ்ரீவில்லிபுத்துார் வன உயிரின சரணாலயம். இங்கு பல்வேறு வகை வனவிலங்குள், பூச்சிகள், சாம்பல் நிற அணில்கள் காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் ராஜபாளையம் அய்யனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு, வத்திராயிருப்பு பிளவக்கல் அணைகளை நிரப்பி விவசாயத்திற்கும், மக்களின் குடிநீருக்கும் பயன்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கேரளாவில் கனமழை பெய்து காட்டாற்று வெள்ளம் ஓடுகிறது. மறு பகுதியான ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் சாரல் மழை கூட பெய்யவில்லை. வனத்தின் அடர்ந்த பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து விலங்குகளின் தாகத்திற்கு கிடைக்கிறது. தென்மேற்கு பருவமழை பலனளிக்காத நிலையில்…

Read More

வழிகாட்டிய கொரோனா; சூப் விற்கும் இன்ஜினியர்

விருதுநகர்:பிழைத்திருத்தல் என்பது 2020ம் ஆண்டிற்கான மிக பொருத்தமான வார்த்தை. இந்த ஆண்டு சாதிக்க அல்லது தொழிலில் லாபம் ஈட்ட உகந்ததாக தெரியவில்லை. உலக பணக்காரரே ஆனாலும் பிழைத்திருத்தல் என்ற நடைமுறையை பின்பற்றி மெல்ல மெல்ல தான் பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப நகர்ந்தாக வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அவர்களுக்கே அந்த நிலை என்றால் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் படும் பாட்டை சொல்லவா வேண்டும். எது நடந்தாலும் குடும்ப பொருளாதாரத்தை ஈடுகட்ட உழைப்பு ஒன்றே மூலதனமாக கொண்டு எண்ணற்றோர் சுய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் விருதுநகர் கணேஷ்நகரை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி முத்துச்செல்வன் தனியார் நிதி நிறுவன பணியில் இருந்து விலகி சுய தொழில் முனைவோராக மாறி உள்ளார். பாவாலி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த இவரது தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் பணிக்கு இடையே மருத்துவமனையும்,…

Read More