கண்ணுக்கு தெரியாமல் ஒளி வீசும் உழைப்பின் மகுடம்

விருதுநகர்:உழைப்பை மட்டுமே மூலதனமாக கொண்டு இனிமையான வாழ்க்கையை தனக்குத்தானே வகுத்து கொண்டவர் விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்த கோவில்பிள்ளை.

பார்வையற்ற போதிலும் தனது 70 வயதிலும் வறுமையை உழைப்பு எனும் மகுடத்தால் விரட்டியடித்து சாதனை படைக்கிறார்.விருதுநகர் அரசு அருங்காட்சியம் அருகே 1976 ல் பெட்டிக்கடையை துவங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார்.

தனது கடையில் புகையிலை உள்ளிட்ட லாகிரி வஸ்துகளை விற்பதில்லை. முன்பு பார்வையற்றோர் உதவி தொகையாக அரசு சார்பில் ரூ.50 கிடைத்தது. தற்போது ரூ.1000 பெறுகிறார்.

அவர் கூறியதாவது: மனைவி லீலா 13 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். திருமண தகவல் மையம் நடத்தி வருகிறேன். மொத்த விலை கடையில் இருந்து துடைப்பு கட்டைகளை வாங்கி நியாய விலைக்கு விற்கிறேன். சுய தொழிலில் மகன் கை நிறைய சம்பாதிக்கிறார். உழைத்து வாழ வேண்டும் என்பது என கொள்கை.தில் இம்மியளவும் பின் வாங்கியது கிடையாது.

1976 ல் முதல் இதே இடத்தில் வியாபாரம் செய்கிறேன். எனக்கு பார்வையில்லை என்ற குறையே இதுவரை இருந்ததில்லை. உங்களுக்கு பார்வை இருக்கிறது; எனக்கு அது இல்லை. அவ்வளவு தான் என்றார். உழைப்பை வாழ்த்த 88700 60516 ல் ஹலோ சொல்லலாம்.

Related posts

Leave a Comment