குறைந்து வரும் நிலத்தடி நீர்

மாவட்டத்தில் குடிநீர் விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சுகின்றனர். இதனால் உள்ளாட்சி நிர்வாகங்களால் சப்ளை செய்யப்படும் குடிநீர் அளவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.

கோடை காலம் முடிந்த பிறகும் கூட குடிநீர் பிரச்னை தீரவில்லை. குடம் ஒன்று ரூ.15 முதல் ரூ.20 வரை வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறைகேடாக நீரை உறிஞ்சுவதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விடுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.நிலத்தடி நீர் மட்டத்தை பொறுத்தமட்டில் சிவப்பு மண்டலம் எனும் அபாய கட்டத்தில் விருதுநகர் உள்ளது.

மக்களுக்கு வழங்கும் பல லட்சம் லிட்டர் குடிநீரை தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஓட்டல்கள் மறைமுகமாக உறிஞ்சுவதை சில உள்ளாட்சி நிர்வாகங்கள் கையூட்டு பெற்று கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியாரால் அதிகப்படியாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீரால் கிணற்று பாசன விவசாயிகளும், நீராதாரமிக்க பகுதிகளும் வறட்சியை சந்திக்கின்றன.

Related posts

Leave a Comment