சிவகாசி:சேதமடைந்த தண்ணீர் தொட்டி, எரியாத தெருவிளக்கு, குண்டும் குழியுமான ரோடு, குப்பைகளால் நிரம்பிய சாக்கடை என அடிப்படை வசதிகளின்றி சிவகாசி வடக்கு ரத வீதி மக்கள் தவிக்கின்றனர்.
சிவகாசி வடக்கு ரத வீதி, சுப்பரமணியம் கோயில் தெரு, வி.கே.எம்., தெரு, அரிசிகொள்வான் தெரு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த குடியிருப்போர் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கி தவிக்கின்றனர். வடக்கு ரத வீதியில் சாக்கடையில் குப்பைகளை கொட்டி மூடி வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் துார் வாரவில்லை. மழைக் காலங்களில் கழிவுநீருடன் மழை நீர் கலந்து ரோட்டில் ஆறாக ஓடுகிறது.
வடக்கு ரத வீதியில் சிவன் கோயில் அருகே டாஸ்மாக் மதுக்கடை உள்ளது. மது அருந்தும் ‘குடி’மகன்கள் காலி பாட்டில்கள், கழிவுகளை ரோடுகள், குடியிருப்பு பகுதிகளில் வீசுகின்றனர். குப்பைகளை குவித்து வைத்து எரிப்பதால் குடியிருப்போர் அவதிப் படுகின்றனர். வி.கே.எம்., தெருவில் மினி விசைப்பம்பு தொட்டி சேதமடைந்து தண்ணீர் பிரச்னை தலைதுாக்கியுள்ளது.