வழிகாட்டிய கொரோனா; சூப் விற்கும் இன்ஜினியர்

விருதுநகர்:பிழைத்திருத்தல் என்பது 2020ம் ஆண்டிற்கான மிக பொருத்தமான வார்த்தை. இந்த ஆண்டு சாதிக்க அல்லது தொழிலில் லாபம் ஈட்ட உகந்ததாக தெரியவில்லை.

உலக பணக்காரரே ஆனாலும் பிழைத்திருத்தல் என்ற நடைமுறையை பின்பற்றி மெல்ல மெல்ல தான் பொருளாதார சூழ்நிலைகளுக்கு ஏற்ப நகர்ந்தாக வேண்டிய கட்டாயம் நிலவுகிறது. அவர்களுக்கே அந்த நிலை என்றால் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள் படும் பாட்டை சொல்லவா வேண்டும்.

எது நடந்தாலும் குடும்ப பொருளாதாரத்தை ஈடுகட்ட உழைப்பு ஒன்றே மூலதனமாக கொண்டு எண்ணற்றோர் சுய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் விருதுநகர் கணேஷ்நகரை சேர்ந்த இன்ஜினியரிங் பட்டதாரி முத்துச்செல்வன் தனியார் நிதி நிறுவன பணியில் இருந்து விலகி சுய தொழில் முனைவோராக மாறி உள்ளார்.

பாவாலி ஊராட்சி செயலாளராக பணிபுரிந்த இவரது தந்தை உடல்நலக்குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.இதனால் பணிக்கு இடையே மருத்துவமனையும், வீடுமாக அழைந்தார். தந்தை குணமடைந்தார். முத்துச்செல்வன் பணியில் சேர முயற்சித்த போது கொரோனா ஊரடங்கால் முடியவில்லை. இதன் காரணமாக சுயதொழில் செய்ய முடிவு செய்த அவர் இன்று மூலிகை சூப் வகைகளை தயாரித்து ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் டூவீலரில் விற்க துவங்கினார்.

நடை பயிற்சி மேற்கொள்வோர் மக்கள் மத்தியில் சூப் வகைகள் மிகுந்த வரவேற்பை பெற்று உள்ளன.சூடு பிடித்தது சூப் விற்பனைதுவக்கத்தில் ஓரிரு சூப் மட்டுமே விற்றது. நாட்கள் நகர விற்பனை சூடு பிடித்து வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் முருங்கைக்கீரை சூப் வரவேற்பை பெற்றுள்ளது.

முடக்கத்தான் கீரை சூப் தயாரிக்க பாவாலி, ஆமத்துார் உள்ளிட்ட பகுதிகளில் சென்று முடக்கத்தான் மூலிகையை சேகரித்து இயற்கை முறையிலே தயாரிக்கிறேன். 70924 64858 ல் அழைத்தால் டோர் டெலிவரியும் செய்கிறேன். ஒரு கப் மூலிகை சூப் ரூ.10க்கு விற்கிறேன்.

முத்துசெல்வன் சுய தொழில் முனைவோர்

Related posts

Leave a Comment