ஸ்ரீவி.,வனப்பகுதியில் வறட்சி குடிநீர், பாசன வசதி குறைவு

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துார் வன உயிரின சரணாலயத்தில் மழையின்றி வறண்டு காணப்படுவதால் குடிநீர், பாசன வசதி குறைந்து வருகிறது.

தேவதானம், சேத்துார், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், வத்திராயிருப்பு, மதுரை மாவட்டம் சாப்டூர் வரை 484 சதுர கி.மி., பரப்பளவு கொண்டது ஸ்ரீவில்லிபுத்துார் வன உயிரின சரணாலயம். இங்கு பல்வேறு வகை வனவிலங்குள், பூச்சிகள், சாம்பல் நிற அணில்கள் காணப்படுகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் ராஜபாளையம் அய்யனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகதோப்பு, வத்திராயிருப்பு பிளவக்கல் அணைகளை நிரப்பி விவசாயத்திற்கும், மக்களின் குடிநீருக்கும் பயன்படுகிறது.

மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான கேரளாவில் கனமழை பெய்து காட்டாற்று வெள்ளம் ஓடுகிறது. மறு பகுதியான ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியில் சாரல் மழை கூட பெய்யவில்லை. வனத்தின் அடர்ந்த பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து விலங்குகளின் தாகத்திற்கு கிடைக்கிறது. தென்மேற்கு பருவமழை பலனளிக்காத நிலையில் வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே வனத்தில் நீர் வரத்து ஏற்பட்டு குடிநீர், பாசன வசதிக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது.

Related posts

Leave a Comment