நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! சுவாரஸ்ய தகவல்கள் இதோ!

தற்போது மத்திய நிதி அமைச்சர் மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் நிர்மலா சீதாராமன் 18 ஆகஸ்ட் 1959-ல் பிறந்தார். அவர் வாழ்கையில் எங்கிருந்து, எங்கு வந்திருக்கிறார் என ஃப்ரீ பிரஸ் ஜர்னஸ் பத்திரிகை, தன் வலை தளத்தில் ஒரு சுவாரஸ்ய செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. அதைப் பார்ப்போம். இதில் கூடுதல் பெருமை என்ன என்றால், இவர் தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரையில் பிறந்தவர் என்கிறது விக்கீபீடியா. சரி விஷயத்துக்கு வருவோம்.

முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர் 1970 – 71 கால கட்டட்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், நிதி அமைச்சராக இருந்து இருக்கிறார். ஆனால் ஒரு முழு நேர நிதி அமைச்சராக பதவி வகிக்கவில்லை. அப்படி முறையாக ஒரு கேபினெட் அமைச்சகத்தின் தொடக்கத்தில் இருந்து, முழு நேரமாக, நிதி அமைச்சராக அமர்த்தப்பட்ட முதல் பெண், நிர்மலா சீதாராமன் தான். எனவே, இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையைப் பெற்று இருக்கிறார்.

கல்லூரி படிப்பு 1980-களில், திருச்சியில் இருக்கும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில், பொருளாதார பிரிவில் பி ஏ முடித்துவிட்டு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம் ஏ பொருளாதாரம் மற்றும் எம் பில் படித்து முடித்து இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறவும் முயற்சித்தாராம். ஆனால் சில சந்தர்ப்ப சூழல்களால் முனைவர் பட்டம் பெற முடியாமல் போய்விட்டதாம்.

பாரதிய ஜனதா கட்சி நிர்மலா சீதாராமன், கடந்த 2006-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தாராம். 2010-ம் ஆண்டு கட்சியின் பேச்சாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அதன் பின் மெல்ல கட்சியில் நல்ல பெயர் எடுத்து முன்னேறினார். 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்த போதே வணிகம் & தொழிற்சாலை அமைச்சகம் இவருக்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின் தான் பாதுகாப்பு அமைச்சகப் பதவி கொடுக்கப்பட்டது.

Recommended by தற்போது மத்திய நிதி அமைச்சர் மற்றும் கார்ப்பரேட் விவகாரத் துறை அமைச்சராக பதவியில் இருக்கும் நிர்மலா சீதாராமன் 18 ஆகஸ்ட் 1959-ல் பிறந்தார். அவர் வாழ்கையில் எங்கிருந்து, எங்கு வந்திருக்கிறார் என ஃப்ரீ பிரஸ் ஜர்னஸ் பத்திரிகை, தன் வலை தளத்தில் ஒரு சுவாரஸ்ய செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. அதைப் பார்ப்போம். இதில் கூடுதல் பெருமை என்ன என்றால், இவர் தமிழகத்தின் தூங்கா நகரமான மதுரையில் பிறந்தவர் என்கிறது விக்கீபீடியா. சரி விஷயத்துக்கு வருவோம்.   முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர் 1970 – 71 கால கட்டட்தில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள், நிதி அமைச்சராக இருந்து இருக்கிறார். ஆனால் ஒரு முழு நேர நிதி அமைச்சராக பதவி வகிக்கவில்லை. அப்படி முறையாக ஒரு கேபினெட் அமைச்சகத்தின் தொடக்கத்தில் இருந்து, முழு நேரமாக, நிதி அமைச்சராக அமர்த்தப்பட்ட முதல் பெண், நிர்மலா சீதாராமன் தான். எனவே, இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர் என்கிற பெருமையைப் பெற்று இருக்கிறார். கல்லூரி படிப்பு 1980-களில், திருச்சியில் இருக்கும் சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில், பொருளாதார பிரிவில் பி ஏ முடித்துவிட்டு, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம் ஏ பொருளாதாரம் மற்றும் எம் பில் படித்து முடித்து இருக்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெறவும் முயற்சித்தாராம். ஆனால் சில சந்தர்ப்ப சூழல்களால் முனைவர் பட்டம் பெற முடியாமல் போய்விட்டதாம். பாரதிய ஜனதா கட்சி நிர்மலா சீதாராமன், கடந்த 2006-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தாராம். 2010-ம் ஆண்டு கட்சியின் பேச்சாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். அதன் பின் மெல்ல கட்சியில் நல்ல பெயர் எடுத்து முன்னேறினார். 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சியைப் பிடித்த போதே வணிகம் & தொழிற்சாலை அமைச்சகம் இவருக்கு கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பின் தான் பாதுகாப்பு அமைச்சகப் பதவி கொடுக்கப்பட்டது.   விற்பனையாளர் பணி 1986-ல் பிரகலா பிரபாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் லண்டனுக்கு பயணப்பட்டார். கொஞ்ச காலம், லண்டனில் ரெஜென்ட் சாலையில் இருந்த Habitat என்கிற கடையில் விற்பனையாளராக (Sales Girl) வேலை பார்த்து இருக்கிறார் நிர்மலா சீதாராமன். அதன் பின் தான் Price Waterhouse Coopers (PWC)-ல் ஆராய்ச்சி & பகுப்பாய்வு பிரிவில் வேலை செய்தாராம்.

உழைப்பு இருந்தல் போதும் நிர்மலா சீதாராமனின் வாழ்கை, சாதாரண மக்களுக்கும், பெரிய பின் புலம் இல்லாதவர்களுக்கும் மற்றொரு நல்ல எடுத்துக்காட்டு. நல்ல கல்வியும், கடின உழைப்பு மட்டும் இருந்தால் போதும், யார் வேண்டுமானாலும், எந்த உயரத்தை வேண்டுமானாலும் தொடலாம் என்பதை நிரூபித்துக் காட்டி இருக்கிறார். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மேடம்.

Related posts

Leave a Comment