ஐடி ஊழியர்களுக்கு இது ஜாக்பாட் தான்.. 1.2 லட்சம் ஊழியர்களுக்கு சர்பிரைஸ் கொடுக்க போகும் இன்ஃபோசிஸ்!

டெல்லி: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனம், அதன் ஊழியர்களில் பாதிபேருக்கு பதவி உயர்வு கொடுக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் மொத்தம் 2.4 லட்சம் ஊழியர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கையினால், 1.2 லட்சம் ஊழியர்கள் பயன் பெறலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த பதவி உயர்வானது வரும் செப்டம்பர் மாதத்தில் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முக்கிய காரணம் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியிலும் மிக வலுவான வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது. மேலும் சர்வதேச அளவில் பல புதிய ஒப்பந்தங்களை போட்டுள்ளதாகவும் இந்த நிறுவனம் கூறியுள்ளது. இதன் காரணமாக இந்த ஊக்குவிப்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த பதவி உயர்வனானது பெரும்பாலும் ஜூனியர் லெவல் ஊழியர்கள் மற்றும் நடுத்தர உழியர்களுக்கு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோயின் காரணமாக இன்று ஏதோ ஒரு அளவுக்காவது முன்னேற்றம் கண்டு வரும் துறைகளில் ஐடி துறையும் உண்டு. ஏனெனில் கொரோனா லாக்டவுன் காரணமாக பல தொழில்சாலைகள், நிறுவனங்கள் மூடப்பட்டன. ஆனாலும் இந்த நெருக்கடியான நிலையிலும் இயங்கி வந்த துறையானது ஐடி துறையாகும்.

ஏனெனில் அதன் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனம் முன்பை விட அதிக ஒப்பந்தம் காரணமாக, 2021ம் நிதியாண்டில் 0 – 2% அளவுக்கு வளர்ச்சி அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் பணி அனுபவம் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக உள்ள ஊழியர்களுக்கு பதவி உயர்வு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மூத்த ஊழியர்களுக்கு பணி உயர்வு எப்போது? மூத்த ஊழியர்களை பொறுத்தவரையில் வணிக நிலைமை உருவாகும்போது பதவி உயர்வுகளை தொடர்ந்து மதிப்பிடுவதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது. பதவி உயர்வு என்பது சிறப்பாக பணி புரியும் ஊழியர்களை தக்க வைத்துக் கொள் வதற்கான ஒரு முயற்சி என்றும், அனைவரும் சம்பள உயர்வு கிடைக்காது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனாவால் முடக்கம் பெருபாலான ஐடி நிறுவனங்கள் கொரோனா தாக்கத்தின் காரணமாக டாடா கன்சல்டன்ஸி மற்றும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் பணியமர்த்தலை முடக்கின. சொல்லபோனால் சம்பள உயர்வு, பணியமர்த்தல் என அனைத்தும் நிறுத்தப்பட்டன. எனினும் சர்வதேச அளவிலான வாடிக்கையாளர்கள் தற்போது ஒப்பந்தத்தினை அதிகரித்து வரும் நிலையில், நிலைமை சற்று மெதுவாக மாறி வருகிறது. இதற்கு உதாரணம் தான் இந்த பதவி உயர்வு.

திறன் உள்ள ஊழியர்களை பணியமர்த்தல் தற்போது இன்ஃபோசிஸ் துறை சார்ந்த நல்ல திறன் உள்ள ஊழியர்களை பணியில் அமர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. குறிப்பாக டிஜிட்டல் திறன் உள்ள சீனியர் லெவல் லேட்டரல் ஊழியர்களை பணியமர்த்தி வருவதாகவும் கூறப்பட்டது. ஆக திறன் உள்ள ஊழியர்களுக்கு எப்போதும் வாய்ப்புகள் இருந்து கொண்டே தான் உள்ளது.

இது உண்மையும் கூட, நல்ல திறன் ஊழியர்களுக்கு என்றும் தேவை உள்ளது தான். அந்த தேவைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ஊழியர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இது அவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புகளை வாரி வழங்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

Related posts

Leave a Comment