குன்றின் மீது சிவனுக்கு கோயில்: நோய்களை தீர்க்கும் கைலாச கங்கை தீர்த்தம்

விருதுநகர்:குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என அவ்வையார் பாடினார். குன்றின் மீது சிவன், பார்வதி தேவியுடன் குடிகொண்டு அருள் பாலிக்கும் அதிசயம் வத்திராயிருப்பு அருகே மூவரை வென்றான் கிராமத்தில் உள்ளது.

பல நுாற்றாண்டுகளுக்கு முன் சிவன், பார்வதி தேவிக்கு முற்றிலும் கடுமையான பாறைகளால் ஆன மூவரை வென்றான் மலையில் குடவரை கோயில் எழுப்பி ஸ்ரீமரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரர்’ என பெயரிட்டு வழிபட்டு வந்தன் விளைவால் பாண்டிய மன்னனின் புகழ் எட்டுத்திக்கிலும் பறைசாற்றியது என்பது புராண வரலாறு.

லிங்கம் மீது அபிேஷகம்:

இக் கோயிலில் மூலவர் லிங்கத்துக்கு மூன்று கால பூஜைகள் நடக்கிறது. மலை மீது வற்றான சுனை ஊற்று கைலாச கங்கை தீர்த்தம்’ என்ற பெயரில் உள்ளது.

இது இமயமலை கைலாசநாதர் கோயில், புனித நதி கங்கை தீர்த்தத்துக்கு நிகரானது என்பதால் கைலாச கங்கை தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. மலையில் உற்பத்தியாகும் தீர்த்தம் மலை பாதையில் உருண்டோடி மூலஸ்தானத்தின் மேற்பரப்பில் ஊடுருவி மூலவர் லிங்கம் மீது தானாகவே விழுந்து அபிேஷகம் செய்யும் அதிசயம் வெறெங்கும் காணக்கிடைக்காத அற்புதக்காட்சியாக உள்ளது.

இந்த தீர்த்தத்தை பருகினால் தீராத நோய்களும் தீரும் என பக்தர்களிடையே அசைக்க முடியாத நம்பிக்கை நிலவுகிறது. வற்றாத சுனை நீர் ஊற்று திமிங்கலம் வாயில் விழுந்து மூலிகை கேணிக்கு செல்லும் அமைப்பும் பாறையில் உள்ளது.

பவுர்ணமியில் கிரிவலம்:

மூவரைவென்றான் கோயிலில் பவுர்ணமி பூஜை சிறப்புமிக்கது. அன்று ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் கேட்ட வரம் தருவார் மலைக்கொழுந்தீஸ்வரர், மரகதவள்ளி அம்பாள் என பக்தர்களிடையே நம்பிக்கை நிலவுகிறது.

Related posts

Leave a Comment