ரூ.65 லட்சம் செலவில் மினரல் பிளான்ட்

காரியாபட்டி:கனிமவள சீனியரேஜ் திட்டத்தின் கீழ் ஆவியூர், கள்ளிக்குடி விலக்கு, வக்கணாங்குண்டு நான்குவழிச்சாலையில் ரூ. 65 லட்சம் செலவில் சோலார் ஹைமாஸ் உள்ளிட்ட பணிகள் முடியும் தருவாயில் உள்ளதாக ஒன்றிய தலைவர் முத்துமாரி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது: கம்பாளி, ஆத்தி குளம், பி. புதுப்பட்டி, அரசகுளத்தில் தலா ரூ. 10 லட்சம் செலவில் மினரல் பிளான்ட் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மாங்குளம், கள்ளங்குளம், சித்து மூன்றடைப்பு, தேனுார் விலக்கு, கல்குறிச்சி உள்ளிட்ட ஊர்களில் தலா ரூ. 60 ஆயிரம் செலவில் சோலார் விளக்குகள் அமைக்கப்பட்டு வருகிறது, என்றார்.

Related posts

Leave a Comment