Success story of Muthukumar

ஹாக்கி டூ ஆயுதப்படை காவலர்: வெற்றியே எனது இலக்கு

சிவகாசி பகுதியை சேர்ந்தவர்கள் காளிமுத்து மற்றும் மாரியம்மாள் இவர்களுடைய இளைய மகன் முத்துக்குமார் இவர் சமீபத்தில் நடைபெற்ற காவலர் தேர்வில் வெற்றி பெற்று ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிகிறார்.
அவரைப் பற்றிய சிறு குறிப்பு.
பள்ளி படிப்பு முதல் கல்லூரி படிப்பு வரை நான் ஹாக்கிவிளையாடி வருகிறேன் நான் மண்டல மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்ற பல வெற்றிகளை எங்களுடைய அணிக்காக பெற்றுத்தந்துள்ளேன்.


ஹாக்கி மீது எனக்கு அளவில்லாத வெறி நான் சர்வதேச அளவில் விளையாட வேண்டும் என்பதே என்னுடைய கனவு ,எனினும் தற்போது உள்ள சூழ்நிலையில் ஆக்கி மூலமாக பெரிய வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தேன்.
கல்லூரிப் படிப்பின் இறுதி ஆண்டில் நான் படிக்கும்போது காவலர் தேர்வு அட்டவணை வெளியானது எனது சக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என்னை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்குமாறு கூறினர் நானும் விண்ணப்பித்தேன்.பிறகு கடினமாக தேர்வுக்கு தயார் ஆனேன் கல்லூரி இறுதி ஆண்டு தோறும் காவலரும் ஒரே சமயத்தில் வந்ததால் என்னால் கல்லூரி இறுதியாண்டு தேர்வு எழுத முடியவில்லை எனினும் காவலர் தேர்வு உயிர் மூச்சாகக் கொண்டு படித்து தேர்வு எழுதினேன் நான் பள்ளி கல்லூரி காலங்களில் ஹாக்கி விளையாட்டில் மண்டல அளவில் வெற்றி பெற்றதால் எனக்கு ஸ்போர்ட்ஸ் கோட்டா நான் பெற்ற மதிப்பெண்கள் உடன் எனக்கு ஆயுத படையில் காவலர் பணி கிடைத்தது.வருங்காலங்களில் நான் சர்வதேச அளவில் ஹாக்கி வேண்டும் என்பதே என்னுடைய கனவு.


தற்போது நான் ஆயுதப்படை பிரிவில் காவலராக பணிபுரிகிறேன் என்றார்.
முத்துக்குமாரின் தவிர்த்து கதை மூலமாக ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற கல்வியுடன் கூடுதல் பயிற்சி என்றால் எளிதாக வெற்றி பெறலாம் என்று நிரூபணமாகிறது
இந்த வெற்றிக் கதையை முத்துக்குமாரின் சகோதரர் திருப்பதி மூலமாக Daily Motivation Facebook பிரிவுக்கு சமர்ப்பிக்கப்பட்டது.

Related posts

Leave a Comment