பிறப்புக்கு விருதுநகர் ,பிழைப்புக்கு சிவகாசி .

பிறப்புக்கு விருதுநகர் ,பிழைப்புக்கு சிவகாசி .விருதுநகர் மாவட்டம் புரதான பெருமையும் ,புகழும் வாய்ந்தது, இங்குள்ள ஒவ்வொரு ஊருக்கும் சுவாரசியமான பெயர் காரணம் உண்டு. இந்த வரலாறை இது வரை யாரும் பதிவிட்டதாக தெரியவில்லை. நம்மால் முடிந்த வரை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஊர்களின் பெயர் காரணத்தை “ஊரும் பெயரும்” என்ற இந்த தொடர் மூலம் தங்களின் பார்வைக்கு விருந்தாக்குகிறது,இந்த வாரம்விருதுபட்டி அலைஸ் விருதுநகர் .விருதுவெற்றி ,“விருதூர்” மற்றும்“விருதையூர்” ,விருதுகெட்டி, விருதுவெட்டி, பரிசுபட்டி, விருதை, விருதையம்பதி, வெயிலுவந்தாள் பட்டிணம் என்றும் கூறப்படுகிறது. ஒரு காலக்கட்டத்தில் கயிறு திரிக்கும் சலுப்பர்கள் இங்கு வாழ்ந்ததால் சலுப்பப்பட்டி என்றும் அழைக்கப்பட்டுள்ளது.1970 களில் கயிறு முறுக்கு தோப்புன்னு சுண்ணாம்புக்கர தெரு பாதையில் இருக்கும் பண்டைய காலத்தில் இளைய நாயக்கன் ஊரணி அருகில் கண்டெடுத்த மண்பாண்ட சில்லுகள் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தய வரலாறை…

Read More

அவர் பாட்டுக்கு சொல்லிட்டு போய்க்கிட்டே இருந்தாரு… தோனியின் ஓய்வு தருணங்கள்.. பாலாஜி சிலிர்ப்பு

துபாய் : கடந்த 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி. அந்த தருணத்தில் அவருடன் இருந்த சிஎஸ்கே பௌலிங் கோச் லஷ்மிபதி பாலாஜி, அந்த நேரத்தில் அவர் தன்னுடன் எப்படி நடந்து கொண்டார் என்பது குறித்து தெரிவித்துள்ளார். இந்த நூற்றாண்டிலேயே சிறப்பான தனித்தன்மையுடன் விளங்கக்கூடிய ஒரே வீரர் எம்எஸ் தோனிதான் என்றும் பாலாஜி உச்சி முகர்ந்துள்ளார். முன்னதாக பயிற்சியில் ஈடுபட்ட தோனி கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தில் சர்வதேச போட்டிகளில் இருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. முன்னதாக சிஎஸ்கே வீரர்களுடன் சென்னை சிதம்பரம் மைதானத்தில் பௌலிங் கோச் லஷ்மிபதி பாலாஜியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தோனி இதையடுத்து தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். அலட்டிக் கொள்ளாத தோனி இதுகுறித்து தன்னிடம் எதுவும்…

Read More

போலீஸ் செய்திகள்” விருதுநகர்

விபத்தில் ஒருவர் பலி விருதுநகர்: விருதுநகர் கே.உசிலம்பட்டியை சேர்ந்தவர் கிரேன் ஆபரேட்டர் மகேந்திரன் 32. டூவீலரில் செல்லும் போது பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை அருகே உள்ள தடுப்பு போர்டில் மோதியதில் இறந்தார். ஊரக போலீசார் விசாரிக்கின்றனர். ரயில் முன் பாய்ந்து தற்கொலை அருப்புக்கோட்டை: புலியூரானை சேர்ந்தவர் போட்டோகிராபர் ஜோசப் 32. குடும்ப பிரச்னை காரணமாக இரவில் புலியூரான் வழியாக வந்த சரக்கு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். விருதுநகர் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Read More

தெரு குழாய் பள்ளத்தில் கழிவுநீர்: கடுப்பாகும் கணக்கனேந்தல் மக்கள்

காரியாபட்டி:தெரு குழாய் பள்ளத்தில் கழிவு நீர்தேக்கம், கொசு தொல்லை என காரியாபட்டி கணக்கனேந்தல் மக்கள் தினமும் பாதிப்பை சந்திக்கின்றனர். போதிய குடிநீர் வசதி இன்றி குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். வாறுகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே குப்பை நிறைந்து கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி பகலிலே கடிக்கும் நிலை உள்ளது. தெருக் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்குவதால் புழக்கத்திற்கான தண்ணீரை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. சாக்கடையை தூய்மைப்படுத்தி பல மாதங்கள் ஆகின்றன. வீட்டு கழிவுநீர் தெருக்களில் தேங்கி சகதியாக உள்ளதால் மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர். மழை நேரங்களில் தெருக்களில் மழை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி தொற்று கிருமிகள் உருவாகின்றன. முக்கிய இடங்களில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் மக்கள் நடாமாட சிரமப்படுகின்றனர்.

Read More

சிதிலமடையும் கல் மண்டபங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் பழமையான கல்மண்டபங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன.மடவார் வளாகம், மம்சாபுரம், மதுரை ரோடு பட்டத்தரசியம்மன் கோயில், இந்திரா நகர், பூவாணி உட்பட பல்வேறு இடங்களில் தொல்லியல்துறை, ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையும், புராதான சிறப்பும், அழகிய கலைநயத்துடன் கூடிய கல்மண்டபங்கள் உள்ளன. இவ்வழியாக செல்வோர் கல் மண்டபங்களில் இளைப்பாறி செல்வது வழக்கம். பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி வருகிறது. துாண்கள் பெயர்ந்து, மேற்கூரைகளில் செடி, கொடிகள் முளைத்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இவற்றை புனரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read More

கைகொடுக்கும் கைவினை பொருட்கள்: தள்ளாத வயதிலும் சாதிக்கும் மூதாட்டி

அருப்புக்கோட்டை:உழைத்தால் உண்டு வாழ்வு என்பதை மெய்பித்து வருபவர் பலருண்டு. உடல் உழைப்புக்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிருபிக்கும் வகையில் 58 வயதில் ஓய்வு பெற்ற பிறகும் பலர் உழைக்கின்றனர். உழைப்பால் மகுடம் சூட்டிய எண்ணற்றோர் வரிசையில் அருப்புக்கோட்டை மெட்டுக்குண்டுவை சேர்ந்த மாரியம்மாளும் ஒருவர். சிறு வயதில் பள்ளியில் கற்றுக்கொடுத்த கைவினை பொருள் தயாரிப்பு பயிற்சியை தனது 62 வயதிலும் நுணுக்கமாகவும், நவீன தொழில்நுட்பத்துடன் தொடர்ந்து வருகிறார். அவர் கூறியதாவது: பள்ளி பருவத்தில் கைவினை ஆசிரியை ஒயர் கூடை பின்னுவதை கற்று கொடுத்தார். நான் உட்பட சக மாணவிகள் ஆர்வத்துடன் கற்று கொண்டோம். அதன் பயனாக பல ஆண்டுகளாக ஒயர் கூடைகளை பல டிசைன்களில் தயாரித்து வருகிறேன். விவசாய பணிகளை முடித்தபின் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக மாற்றி உள்ளேன். குறிப்பாக மதியம் குட்டித்துாக்கத்தை தவிர்த்து கைவினை பொருள்…

Read More