சிதிலமடையும் கல் மண்டபங்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:ஸ்ரீவில்லிபுத்துாரில் பழமையான கல்மண்டபங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து வருகின்றன.மடவார் வளாகம், மம்சாபுரம், மதுரை ரோடு பட்டத்தரசியம்மன் கோயில், இந்திரா நகர், பூவாணி உட்பட பல்வேறு இடங்களில் தொல்லியல்துறை, ஹிந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பழமையும், புராதான சிறப்பும், அழகிய கலைநயத்துடன் கூடிய கல்மண்டபங்கள் உள்ளன.

இவ்வழியாக செல்வோர் கல் மண்டபங்களில் இளைப்பாறி செல்வது வழக்கம். பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி வருகிறது. துாண்கள் பெயர்ந்து, மேற்கூரைகளில் செடி, கொடிகள் முளைத்து விரிசல் ஏற்பட்டுள்ளது. இவற்றை புனரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related posts

Leave a Comment