தெரு குழாய் பள்ளத்தில் கழிவுநீர்: கடுப்பாகும் கணக்கனேந்தல் மக்கள்

காரியாபட்டி:தெரு குழாய் பள்ளத்தில் கழிவு நீர்தேக்கம், கொசு தொல்லை என காரியாபட்டி கணக்கனேந்தல் மக்கள் தினமும் பாதிப்பை சந்திக்கின்றனர்.

போதிய குடிநீர் வசதி இன்றி குடிநீரை விலைக்கு வாங்க வேண்டிய நிலையில் மக்கள் உள்ளனர். வாறுகால் வசதி இல்லாததால் ஆங்காங்கே குப்பை நிறைந்து கழிவுநீர் தேங்குவதால் துர்நாற்றம் ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி பகலிலே கடிக்கும் நிலை உள்ளது. தெருக் குழாய்க்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் கழிவுநீர் தேங்குவதால் புழக்கத்திற்கான தண்ணீரை பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

சாக்கடையை தூய்மைப்படுத்தி பல மாதங்கள் ஆகின்றன. வீட்டு கழிவுநீர் தெருக்களில் தேங்கி சகதியாக உள்ளதால் மக்கள் நடமாட சிரமப்படுகின்றனர். மழை நேரங்களில் தெருக்களில் மழை நீர் செல்ல வழியில்லாமல் தேங்கி தொற்று கிருமிகள் உருவாகின்றன. முக்கிய இடங்களில் தெருவிளக்குகள் இல்லாததால் இரவில் மக்கள் நடாமாட சிரமப்படுகின்றனர்.

Related posts

Leave a Comment