விலை உயரும் வத்தல்

விருதுநகர்:விருதுநகர் மார்க்கெட்டில் உருட்டு உளுந்து வகைகள், வத்தல் விலை அதிகரித்துள்ளது.

மார்க்கெட்டில் கடலை எண்ணெய்(15 கிலோ டின்) ரூ.2450, நல்லெண்ணெய் ரூ.3900. சன்பிளவர் எண்ணெய் ரூ.1550, பாமாயில் ரூ.20 அதிகரித்து ரூ.1460, 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.5500, 100 கிலோ சர்க்கரை ரூ.40 குறைந்து ரூ.3700க்கு விற்கப்படுகிறது. மைதா 90 கிலோ பை ரூ.3330, 55 கிலோ பொரிகடலை ரூ.30 குறைந்து ரூ.3650, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.100 குறைந்து ரூ.7800, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.100 குறைந்து ரூ.8500, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.100 குறைந்து ரூ.6300, உளுந்து லயன் ரூ.300 அதிகரித்து ரூ.6800க்கு விற்கப்படுகிறது.

மைசூர் பருப்பு பருவட்டு ரூ.100 அதிகரித்து ரூ.7100, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.200 அதிகரித்து ரூ.10,000, பர்மா வகை ரூ.7600, 100 கிலோ தொலி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.7600, 100 கிலோ பாசிப்பருப்பு ரூ.100 குறைந்து 8500, ஒரு குவிண்டால் ஆந்திரா ஏ.சி., வத்தல் ரூ.500 அதிகரித்து ரூ.12,000 முதல் 12,500க்கு விற்கப்படுகிறது. முண்டு வத்தல், நாட்டு வத்தல் வரத்து இல்லை.

Related posts

Leave a Comment