Sivakasi.info 1800+likes

GUYS! 1800 followers! Thank you so much for all the love and support!Technology and Business related Advertisements in Sivakasi and Virudhunagar District Website Development Online Shopping Mobile Application SEO Degitial Marketing For advertisement Please Context 9750681858 & 8124986645 Website link http://virudhunagar.info http://sivakasi.info http://sivakasinews.in /http://therajapalayam.com/

Read More

ஆக்கிரமிப்பால் மாயமான தெரு:பரிதவிப்பில் பஞ்சாயத்து யூனியன் காலனி மக்கள்

விருதுநகர்:தெருவிளக்குகள், ரோடு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளில் குறைபாடு, தனிநபர் ஆக்கிரமிப்பால் காணாமல் போன தெரு என விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் காலனி மக்கள் தவிக்கின்றனர். சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் உள்ள இக்காலனியில் போதிய ரோடு வசதி இல்லை. \ 5 தெருக்களுமே மண்ரோடாக தான் காட்சி அளிக்கிறது. 2வது தெரு தனிநபர் ஆக்கிரமிக்க தெருவே காணாமல் போனது. இதே போன்று தனியார் பள்ளிக்கூடம் அருகே உள்ள பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தெருவிளக்குகள் குறைந்த அளவே உள்ளதால் இரவில் இருளில் முழ்கிறது. நான்கு வழிச்சாலையை யொட்டி இப்பகுதி இருப்பதால் அடிக்கடி திருட்டு போன்ற குற்றசம்பவங்களும் நடக்கிறது. வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை ஆகிறது. அதுவும் போர் குடிநீர் என்பதால் புழக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். குடி நீரை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகமோ குப்பையை அள்ளுவதில் தொடர்ந்து அலட்சியம்…

Read More

ஊரணிக்கு உயிர் கொடுத்த இளைஞர்கள்

ராஜபாளையம்:போதிய மழை இல்லாமை,பெய்யும் மழை நீரை சேமிக்க தவறியது, பெருகி வரும் மக்கள் தொகை என்பன போன்ற காரணங்களால் நிலத்தடி நீரின் அளவு வேகமாக குறைந்து வருகிறது. ராட்சத குழாய்களால் முறையற்ற வகைகளில் நிலத்தடிநீரும் உறிஞ்சப்படுவதால் பெரும்பாலான கிணறுகள் வறண்டு விட்டன. குடிதண்ணீர், விவசாயம் என இரண்டுக்கும் நிலத்தடி நீரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது. இதன் தேவையை உணர்ந்த ராஜபாளையம் பச்சமடம் பகுதி இளைஞர் சங்கத்தினர் ஒன்று கூடி இங்குள்ள பச்சமடம் ஊரணியை 2017 ல் துார் வாரினர். முறையாக பராமரித்து தற்போது வரை சாக்கடை கலக்காது துாய நீராக பராமரித்து வருகின்றனர். இதற்காக இப்பகுதி இளைஞர் குழுவினர் ஒன்றினைந்துரூ. 10 லட்சம் வரை சமுதாய பெரியோர்களிடம் வசூலித்து ஊரணி சுற்று பகுதிகளை சோலையாக்கி உள்ளனர். ஊரணியில் தண்ணீர் ததும்ப சுற்றுப்பகுதியில் உள்ள மங்காபுரம், கம்மாபட்டி, எம்.ஆர் .நகர்…

Read More

பெற்றோருக்கு உதவும் பள்ளி சிறுவர்கள்

சிவகாசி:கொரோனா ஊரடங்கால் பள்ளி விடுமுறையில் சிறுவர்கள் பெற்றோருக்கு உதவியாக சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் இப்பகுதியில் ஊரடங்கால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன் இணை தொழிலான அட்டை பெட்டி தயாரிப்பில் ஏராளமானோர் குடிசை தொழிலாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தனியாக இயந்திரங்கள் தேவையில்லை. வீட்டிலேயே மூலப்பொருட்களை கொண்டு தயாரிப்பதால் பள்ளி சிறுவர்கள் பெற்றோருக்கு உதவி வருகின்றனர். இதோடு காலை, மாலையில் படிப்பிலும் கவனம் செலுத்துகின்றனர்.

Read More

சர்க்கரை நோயை விரட்டும் தேன் பழம்

அருப்புக்கோட்டை:உடல் உழைப்பின்மை, உணவு பழக்க வழக்கத்தால் சிறு வயதினர் கூட சர்க்கரை, ரத்த அழுத்த நோய்யால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நோயாளிகள் ஆயுள் முழுவதும் மாத்திரை உட்கொள்ள வேண்டும். சர்க்கரை நோயாளிகள் இனிப்பை கட்டாயம் தவிர்க்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்காக பக்க விளைவை ஏற்படுத்தும் ‘சுகர் பிரீ’ மாத்திரைகளை எடுத்து கொள்கின்றனர். இயற்கை மூலிகைகளால் குணப்படுத்த கூடிய மருந்துகள் ஏராளமாக உள்ளன. அவற்றின் அருமை பலருக்கு தெரியவில்லை.சர்க்கரை நோயாளிகளுக்காகவே இனிப்புச்சுவை கொண்ட தேன் பழம் அருமருந்தாக உள்ளது. தேன் பழ மரத்தில் உள்ள இலை, பூ, காய், பழம், பட்டை, வேர் என அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. தேன் பழம் துாக்கலான இனிப்பு சுவையுடன் தேன் சாப்பிட்டது போல் இருக்கும். இதில் வைட்டமின் பி,சி,இ,இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளன. சர்க்கரை, ரத்த…

Read More

லாபம் அள்ளி தரும் சிப்பி காளான்: விரும்புவோருக்கு இலவச பயிற்சி

காரியாபட்டி:மழைக்காலத்தில் இயற்கையாக காளான்கள் முளைக்கும். அவற்றை சேகரித்து சமைத்தால் அவ்வளவு ருசியாக பக்கத்து வீடு வரை மணம் வீசும். அது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான புரதச்சத்துக்கள் இதில் அதிகம் உள்ளன. தற்போது மழை பொழிவு இருந்தால் கூட இயற்கை மாற்றத்தால் முன்பு போல் அதிக அளவில் காளான்கள் முளைப்பதில்லை. அப்படியே முளைத்தாலும் அதை தேடிப் பிடித்து சேகரிக்கும் பழக்கம் பெரும்பாலானவர்களிடம் இல்லை. இந்த சூழ்நிலையில் தான் செயற்கைமுறை காளான்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதை வளர்க்க பலர் பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர். இயற்கை காளான்களை போல் ருசி, மணம் இருப்பதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. நல்ல லாபம் உள்ள தொழிலாக இருப்பதால் இத்தொழிலை செய்ய பலரும் முன்வருகின்றனர். மதுரையை சேர்ந்த ராமலிங்கம் காரியாபட்டி கரியனேந்தலில் சிவபாலா இயற்கை…

Read More

அதிகாரிக்கு அபராதம்

விருதுநகர்:வெம்பக்கோட்டையை சேர்ந்த கலையரசி தகவல் உரிமை சட்டத்தின் கீழ் ஊராட்சி நிதி தொடர்பாக கள ஆய்வு செய்ய 2019 செப்., 30ல் பொது தகவல் அலுவலரான துணை தாசில்தார் பஞ்சவர்ணம், தாசில்தார் வானதியிடம் முறையீடு செய்தார். பதிலளிக்காததால் மாநில கமிஷனர் செல்வராஜிடம் மேல்முறையீடு செய்தார். அவர், முறையாக பதிலளிக்காத துணை தாசில்தார் பஞ்சவர்ணம் ரூ.2 ஆயிரம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

Read More