அவசியம் * அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் மேம்படுத்துவது * ரூ.பல லட்சம் ஒதுக்கியும் தூய்மை பணி கேள்விக்குறி

நரிக்குடி:மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சுகாதார பணிகளை மெற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதற்காக ரூ.பல லட்சம் ஒதுக்கியும் துாய்மை, சுகாதாரம் மேம்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தூய்மை பணிகள் சரிவர நடைபெறாததால் தொற்று நோய் கிருமிகள் பரவும் அபாயம் நிலவுகிறது. தூய்மை பணிகளை மேற்கொள்ள தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் ரூ.பல லட்சம் வழங்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவலால் ஊழியர் பற்றாக்குறையால் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் துாய்மை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

விருதுநகர் அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் தூய்மைப்படுத்தாமல் மோசமாக இருந்தது குறித்து சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ காட்சி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று தடுப்பு பணிகளை மேற்கொள்ள தினமும் ரூ.25 கோடி செலவு செய்வதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிதியை முறையாக பயன்படுத்தி சுகாதாரம் மேம்பட பாடுபட எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.


அரசு மருத்துவமனை களின் தூய்மை பணிக்கு அரசு ரூ.பல கோடிகளை செலவு செய்கிறது. எனினும் பணி சரிவர நடக்கவில்லை. நோயை குணப்படுத்தும் அரசு மருத்துவமனைகளே நோயை உற்பத்தி செய்யும் கூடாரமாக மாறும் அபாயம் நிலவுகிறது. இதை தடுக்க துாய்மை பணிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

ராமச்சந்திரன், சமூக ஆர்வலர், உலக்குடி

Related posts

Leave a Comment