ஆக்கிரமிப்பால் மாயமான தெரு:பரிதவிப்பில் பஞ்சாயத்து யூனியன் காலனி மக்கள்

விருதுநகர்:தெருவிளக்குகள், ரோடு, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளில் குறைபாடு, தனிநபர் ஆக்கிரமிப்பால் காணாமல் போன தெரு என விருதுநகர் பஞ்சாயத்து யூனியன் காலனி மக்கள் தவிக்கின்றனர்.

சத்திரரெட்டியபட்டி ஊராட்சியில் உள்ள இக்காலனியில் போதிய ரோடு வசதி இல்லை. \

5 தெருக்களுமே மண்ரோடாக தான் காட்சி அளிக்கிறது. 2வது தெரு தனிநபர் ஆக்கிரமிக்க தெருவே காணாமல் போனது. இதே போன்று தனியார் பள்ளிக்கூடம் அருகே உள்ள பாதையும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தெருவிளக்குகள் குறைந்த அளவே உள்ளதால் இரவில் இருளில் முழ்கிறது.

நான்கு வழிச்சாலையை யொட்டி இப்பகுதி இருப்பதால் அடிக்கடி திருட்டு போன்ற குற்றசம்பவங்களும் நடக்கிறது. வாரம் ஒரு முறை குடிநீர் சப்ளை ஆகிறது. அதுவும் போர் குடிநீர் என்பதால் புழக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். குடி நீரை விலைக்கு வாங்க வேண்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகமோ குப்பையை அள்ளுவதில் தொடர்ந்து அலட்சியம் செய்கிறது. மக்களின் குறைகளை நிவர்த்தி செய்ய ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

தெருவை மீட்டு தாருங்க

1984ல் இப்பகுதி உருவாக்கப்பட்ட போது இருந்த வரைபடத்தில் 2வது தெரு இருப்பது தெளிவாக உள்ளது. தற்போது தனிநபர் ஆக்கிரமித்துள்ளார். சர்வீஸ் ரோட்டின் மழைநீர் வடிகாலையும் காணவில்லை. இதனால் மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி சிரமம் ஏற்படுகிறது. தெருவை மீட்டு தர வேண்டும்.

ஜெயபால், ஓய்வு ஆசிரியர்.

இருளில் வாழ்கிறோம்

தெருவிளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் வெளியே நடமாட முடிவதில்லை. கருவேலமரங்களை அகற்றி வருவதால் பெரிய அளவில் விஷப்பூச்சிகள் தாக்கம் குறைந்து உள்ளது. இருப்பினும் இருள் காரணமாக அச்சம் உள்ளது. விடுதி அருகே கிடக்கும் குப்பையை ஊராட்சி நிர்வாகம் அகற்றுவதே கிடையாது.

சுதந்திரபாண்டியன்,

துணைத் தலைவர், குடியிருப்போர் சங்கம்.

ரோடின்றி அடிக்கடி விபத்து க்ஷ

ரோடு வசதி இல்லாததால் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம். குண்டும் குழியுமாக இருப்பதால் இரவில் போதிய வெளிச்சம் இல்லாததால் அடிக்கடி விபத்து நடக்கிறது. அவசரம் என்றால் வயதானவர்களை மருத்துவமனைக்கு கூட அழைத்து செல்ல சிரமமாக உள்ளது. ரோடு போட ஊராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும்.

தங்கசாமி, செயலாளர், குடியிருப்போர் சங்கம்

நடவடிக்கை உண்டு

தெருவிளக்குகள் கேட்டு மக்கள் மனு கொடுத்துள்ளனர். விரைவில் அமைக்கபடும். ஆக்கிரமிப்பு குறித்து தாசில்தாரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் அகற்றுவதாக கூறி உள்ளனர். நிதி வந்தவுடன் ரோடு போட்டு தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மருதுராஜ், ஊராட்சி தலைவர்.

Related posts

Leave a Comment