பெற்றோருக்கு உதவும் பள்ளி சிறுவர்கள்

சிவகாசி:கொரோனா ஊரடங்கால் பள்ளி விடுமுறையில் சிறுவர்கள் பெற்றோருக்கு உதவியாக சிவகாசி பகுதியில் பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்

இப்பகுதியில் ஊரடங்கால் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இதன் இணை தொழிலான அட்டை பெட்டி தயாரிப்பில் ஏராளமானோர் குடிசை தொழிலாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக தனியாக இயந்திரங்கள் தேவையில்லை.

வீட்டிலேயே மூலப்பொருட்களை கொண்டு தயாரிப்பதால் பள்ளி சிறுவர்கள் பெற்றோருக்கு உதவி வருகின்றனர். இதோடு காலை, மாலையில் படிப்பிலும் கவனம் செலுத்துகின்றனர்.

Related posts

Leave a Comment