ஆனையூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட #முனீஸ்நகர் மற்றும்#ஆசாரிகாலனி மற்றும் #அம்பேத்கர் காலனி குண்டும் குழியுமாக இருந்த ரோடு சாலையை மழைநீர் தேங்கி இருக்கும் பள்ளத்தை உடனடியாக கிராவல் அடித்து சரி செய்யப் பட்டது .,என்றும் மக்கள் நலப்பணியில் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி மன்றத்தலைவர் லயன் #V.கருப்பு (எ ) #லட்சுமிநாராயணன்
Read MoreDay: August 25, 2020
சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம்
சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம் சார்பில் ஆர்கனிக் ஆல்பம் 30c , 5000டப்பா மாத்திரைகள் ஆனையூர் முதல்நிலை ஊராட்சி பொது மக்களுக்கு வழங்குவதற்க்கு ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும் எங்களது அரிமாவும் ஆன V.லட்சுமிநாராயணன் அவர்களிடம் சிவகாசி தொழில் நகர் அரிமா சங்க தலைவர் A. கண்ணன் மற்றும் அரிமா P. ரவீந்திரன் அவர்களும் வழங்கினார்கள் .எங்களுக்கு உதவிய சந்திர மோகன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் சேவையில் சிவகாசி தொழில் நகர் அரிமா சங்கம்
Read Moreகுழாய்கள் உடைப்பால் வீணாகும் குடிநீர்
சாத்துார்:சாத்துார் மற்றும் சுற்றுக் கிராம மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பை சீரமைக்க அதிகாரிகளின் அலட்சி யமும் தொடர்வதால் தண்ணீரும் வீணாகி மக்களும் பாதிப்பை சந்திக்கின்றனர். அன்றாடம் குடிநீர் சீராக கிடைக்க அரசு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே நீர்ரேற்று நிலையங்களும் தரைமட்ட பம்பிங் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் சீராக செல்வதற்காக இடையிடையே ஏர் வாழ்வு தொட்டியும் அமைத்துள்ளனர். அழுத்தம் காரணமாக குழாய் உடைப்பு ஏற்படுவதை தவிர்க்கவே இது போன்ற வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இவற்றை முறையாக பராமரிக்க தவறுவதால் குழாய் உடைந்து குடிநீரும் ஆங்காங்கே விணாகிறது. இதனால் சாத்துார் நகராட்சிக்கு தினமும் கிடைக்கவேண்டிய 30 லட்சம் லிட்டர் தண்ணீருக்கு பதில்…
Read Moreகும்பாபிஷேக விழா துவக்கம்
சிவகாசி:விருதுநகர் அருகே மூளிப்பட்டி ஜமீனுக்கு சொந்தமான அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குலதெய்வ கோயிலான தவசிலிங்க சுவாமி கோயிலில் ஆக.28ல் கும்பாபிஷேகம் நடக்கிறது. இவ்விழா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அமைச்சர் பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார்.
Read Moreகொரோனாவை விரட்டும் உணவுகள்
விருதுநகர்:உடலை கவனமாக பார்த்து கொண்டால் மட்டுமே உடல் நம்மை கவனமாக பார்த்து கொள்ளும். உடல் தான் உங்கள் சொத்து. பணம் இன்று வரும் நாளை போகும்.உறவினர்கள், நண்பர்கள் நிரந்தரமல்ல. உடலுக்கு உதவ உங்களை விட்டால் யாருமில்லை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜி. இக்கூற்றை அடி பிறழாமல் பின்பற்றி வருகின்றனர் விருதுநகர் இயற்கை நல வாழ்வு சங்க உறுப்பினர்கள்.இவர்கள் உயிருள்ள உணவுகளை (சமைக்காத உணவு) மட்டுமே உண்பர். மாதம் தோறும் நான்காவது ஞாயிறு எம்.எஸ்.பி. ,நகராட்சி பூங்காவில் மாலை 4:30 முதல் 6:30 மணி வரை நல வாழ்வியல் முகாம் நடத்தி உடல் ஆரோக்கியம் குறித்து இயற்கை மருத்துவ வல்லுனர்கள் கொண்டு ஆலோசனையும் வழங்குகின்றனர். இதோடு உயிருள்ள உணவுகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், நோய் எதிர்ப்பு…
Read Moreபுதுமையாகும் பழமை ‘டிவி’கள்
விருதுநகர்:தொழில் திறமை என்பது கடவுள் நாம் ஒவ்வொருவரும் வாழ்வதற்கு அளித்த கொடை. அதை சிறப்பாக பயன்படுத்தி சுற்றி இருப்போருக்கு நலம் பயக்க செய்வதே நல்லது. எந்த வேலை செய்தாலும் மனதிற்கு பிடித்து செய்யும் போது அது தரும் முடிவுகளே அபாரமாக இருக்கும். நாம் விரும்பிய பணியே செய்யும் தொழிலாக கிடைத்தால் அதற்கு ஈடு இணை இந்த உலகில் இல்லை. அந்த வகையில் தான் செய்யும் பணியை விரும்பி பிறருக்கு உதவும் வகையில் செய்து வருகிறார் விருதுநகர் சென்னல்குடியை சேர்ந்த நரேந்திரன். சிவகாசி ஆற்றுப்பாலம் அருகே எம்.கே.எம்., எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வரும் இவர் பழைய மாடல் ‘டிவி’களுக்கு பென்டிரைவ் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி புதுமைபடுத்துகிறார். இ.இ.இ., டிப்ளமோ முடித்த இவர் சிறு வயதிலிருந்தே மின்சாதன கருவிகளின் செயல்பாடுகள் மீது அதீத ஈடுபாடு கொண்டவர். ‘டிவி’ தவிர ஸ்மார்ட்போன்,…
Read Moreஅச்சம் மழையில் நீரில் மூழ்கும் ரோடு பாலங்கள் தடுப்பு சுவர் இல்லாமல் விபத்து அபாயம்
சாத்துார்:மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள ரோடு பாலங்கள் தாழ்ந்து உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும்போது மூழ்கின்றன. இதனால் அவ்வழியாக வரும் வாகனங்கள் ரோடு இப்பது தெரியாது விபத்தில் சிக்கும் நிலை தொடர்கிறது. ரோடுகளில் குறுக்காக செல்லும் நீர் வரத்து பாதைகளில் உயரம் குறைவான பாலங்கள் அதிகம் உள்ளன. மழைக்காலங்களில் இப்பாலங்களை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுக்கிறது. இது போன்ற நேரத்தில் வாகன போக்குவரத்து பாதிக்கும் நிலை உள்ளது. இதோடு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பாலங்களில் தடுப்பு சுவர்களும் சேதமடைந்துள்ளது. பலபாலங்களில் நீரின் ஆழத்தை அறிந்து கொள்ள அளவுகோல் பொருத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இவைகளும் சேதமடைந்துள்ளன. மழை நீர் ஓடியதால் ரோடுகளும் சேதமடைந்து பள்ளம் மேடாக காணப்படுகிறது. பாலத்தில் வாகனங்கள் வரும்போது தடுப்பு சுவர் இன்றி விபத்தும் நேரிடுகிறது . இது போன்ற பாலங்களை கண்டறிந்து…
Read More