அச்சம் மழையில் நீரில் மூழ்கும் ரோடு பாலங்கள் தடுப்பு சுவர் இல்லாமல் விபத்து அபாயம்

சாத்துார்:மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் உள்ள ரோடு பாலங்கள் தாழ்ந்து உள்ளதால் மழை காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து வரும்போது மூழ்கின்றன. இதனால் அவ்வழியாக வரும் வாகனங்கள் ரோடு இப்பது தெரியாது விபத்தில் சிக்கும் நிலை தொடர்கிறது.

ரோடுகளில் குறுக்காக செல்லும் நீர் வரத்து பாதைகளில் உயரம் குறைவான பாலங்கள் அதிகம் உள்ளன. மழைக்காலங்களில் இப்பாலங்களை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுக்கிறது. இது போன்ற நேரத்தில் வாகன போக்குவரத்து பாதிக்கும் நிலை உள்ளது. இதோடு பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இப்பாலங்களில் தடுப்பு சுவர்களும் சேதமடைந்துள்ளது. பலபாலங்களில் நீரின் ஆழத்தை அறிந்து கொள்ள அளவுகோல் பொருத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இவைகளும் சேதமடைந்துள்ளன. 

மழை நீர் ஓடியதால் ரோடுகளும் சேதமடைந்து பள்ளம் மேடாக காணப்படுகிறது. பாலத்தில் வாகனங்கள் வரும்போது தடுப்பு சுவர் இன்றி விபத்தும் நேரிடுகிறது . இது போன்ற பாலங்களை கண்டறிந்து உயர்த்தி கட்டுவதோடு தடுப்புகள் ஏற்படுத்தவும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்..

தேவை தடுப்பு கம்பி

பல ரோடு பாலங்கள் பராமரிப்பின்றி உள்ளன. பலத்த மழை பெய்யும் போது பாலங்களை ழூழ்கடித்தப்படி தண்ணீர் செல்வது, தடுப்புச்சுவரும் இல்லாமல் உள்ளதால் மழைகாலங்களில் இவ்வழியாக வருவோர் விபத்தில் சிக்குகின்றனர். இதை தடுக்க தடுப்பு கம்பி அமைத்தல் போன்ற நடவடிக்கைகள் அவசியாகிறது.

மாரியப்பன், ஆட்டே டிரைவர், சாத்துார்.


Related posts

Leave a Comment