குழாய்கள் உடைப்பால் வீணாகும் குடிநீர்

சாத்துார்:சாத்துார் மற்றும் சுற்றுக் கிராம மக்கள் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கொண்டுவரப்பட்ட தாமிரபரணி கூட்டுகுடிநீர் திட்ட குழாய்கள் உடைப்பை சீரமைக்க அதிகாரிகளின் அலட்சி யமும் தொடர்வதால் தண்ணீரும் வீணாகி மக்களும் பாதிப்பை சந்திக்கின்றனர். 

அன்றாடம் குடிநீர் சீராக கிடைக்க அரசு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தி பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கி குடிநீர் பகிர்மான குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே நீர்ரேற்று நிலையங்களும் தரைமட்ட பம்பிங் தொட்டியும் கட்டப்பட்டுள்ளது. தண்ணீர் சீராக செல்வதற்காக இடையிடையே ஏர் வாழ்வு தொட்டியும் அமைத்துள்ளனர். அழுத்தம் காரணமாக குழாய் உடைப்பு ஏற்படுவதை தவிர்க்கவே இது போன்ற வசதி ஏற்படுத்தப்பட்டு

உள்ளது. 

ஆனால் இவற்றை முறையாக பராமரிக்க தவறுவதால் குழாய் உடைந்து குடிநீரும் ஆங்காங்கே விணாகிறது. இதனால் சாத்துார் நகராட்சிக்கு தினமும் கிடைக்கவேண்டிய 30 லட்சம் லிட்டர் தண்ணீருக்கு பதில் 17 லட்சம் லிட்டரே கிடைக்கிறது. கிராமத்திற்கும் செல்லும் அளவும் குறைந்து மக்கள் குடிநீருக்காக அல்லாடும் நிலையும் தொடர்கிறது. ஆண்டாண்டு காலமாக தொடரும் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க துறை அதிகாரிகள் ஒருங்கிணந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Related posts

Leave a Comment