கொரோனாவை விரட்டும் உணவுகள்

விருதுநகர்:உடலை கவனமாக பார்த்து கொண்டால் மட்டுமே உடல் நம்மை கவனமாக பார்த்து கொள்ளும். உடல் தான் உங்கள் சொத்து. 

பணம் இன்று வரும் நாளை போகும்.உறவினர்கள், நண்பர்கள் நிரந்தரமல்ல. உடலுக்கு உதவ உங்களை விட்டால் யாருமில்லை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்கிறார் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர்ஜி.

இக்கூற்றை அடி பிறழாமல் பின்பற்றி வருகின்றனர் விருதுநகர் இயற்கை நல வாழ்வு சங்க உறுப்பினர்கள்.இவர்கள் உயிருள்ள உணவுகளை (சமைக்காத உணவு) மட்டுமே உண்பர். மாதம் தோறும் நான்காவது ஞாயிறு எம்.எஸ்.பி. ,நகராட்சி பூங்காவில் மாலை 4:30 முதல் 6:30 மணி வரை நல வாழ்வியல் முகாம் நடத்தி உடல் ஆரோக்கியம் குறித்து இயற்கை மருத்துவ வல்லுனர்கள் கொண்டு ஆலோசனையும் வழங்குகின்றனர். 

இதோடு உயிருள்ள உணவுகளை உட்கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு குறித்து களப்பயிற்சியும் அளிக்கின்றனர்.

Related posts

Leave a Comment