புதுமையாகும் பழமை ‘டிவி’கள்

விருதுநகர்:தொழில் திறமை என்பது கடவுள் நாம் ஒவ்வொருவரும் வாழ்வதற்கு அளித்த கொடை. அதை சிறப்பாக பயன்படுத்தி சுற்றி இருப்போருக்கு நலம் பயக்க செய்வதே நல்லது. எந்த வேலை செய்தாலும் மனதிற்கு பிடித்து செய்யும் போது அது தரும் முடிவுகளே அபாரமாக இருக்கும். நாம் விரும்பிய பணியே செய்யும் தொழிலாக கிடைத்தால் அதற்கு ஈடு இணை இந்த உலகில் இல்லை. 

அந்த வகையில் தான் செய்யும் பணியை விரும்பி பிறருக்கு உதவும் வகையில் செய்து வருகிறார் விருதுநகர் சென்னல்குடியை சேர்ந்த நரேந்திரன். சிவகாசி ஆற்றுப்பாலம் அருகே எம்.கே.எம்., எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வரும் இவர் பழைய மாடல் ‘டிவி’களுக்கு பென்டிரைவ் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி புதுமைபடுத்துகிறார்.

இ.இ.இ., டிப்ளமோ முடித்த இவர் சிறு வயதிலிருந்தே மின்சாதன கருவிகளின் செயல்பாடுகள் மீது அதீத ஈடுபாடு கொண்டவர். ‘டிவி’ தவிர ஸ்மார்ட்போன், வாஷிங் மெஷின், ஏ.சி., உள்ளிட்ட இயந்திரங்களையும் சர்வசாதரணமாக பழுது பார்க்கிறார். ‘டிவி’யில் பென்டிரைவ் போன்று ரிமோட் மூலம் இயக்கும் ஆண்ட்ராய்டு வசதி, டூவீலரில் சார்ஜர் என உள்ளிட்ட பலவித புதுமைகளை புகுத்துகிறார். 

தரத்தை மட்டும் முன்னிறுத்தி பழுது பார்ப்பதால் தரத்திற்கேற்ற விலையை நிர்ணயிக்கிறார். ஏழைகளுக்கு உதவ பென்டிரைவ் சிறுவயதில் இருந்தே மின்சாதன கருவிகளை கழற்றி அதன் கட்டமைப்பை ஆராய்வேன். தற்போதைய காலகட்டத்தில் கேசட்டுகளுக்கு மாற்றாக பென்டிரைவ் வந்து விட்டன. அதற்காக பழைய ‘டிவி’களை துாக்கி போடவா முடியும். ஏழைகளும் பயன்படும் விதத்தில் இதில் பென்டிரைவ் அமைக்க முடிவு செய்தேன். இதற்கு ரூ.1000 முதல் 5000 வரை செலவாகிறது. தொடர்புக்கு 73975 50828.நரேந்திரன், எலெக்ட்ரிக் மெக்கானிக்.

Related posts

Leave a Comment