#மு.க.ஸ்டாலின் #நீட் ஜே.இ.இ #சுப்ரீம்கோர்ட்

நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்திவைக்க கோரி ஆந்திரா, தெலங்கானா, கேரளா, ஒடிசா ஆகிய மாநில முதல்வர்கள் சுப்ரீம் கோர்ட்டை நாட வேண்டும் – தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கடிதம்

Read More

ஜம்மு காஷ்மீரில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சியளிக்க முடிவெடுத்த ரெய்னா

ஜம்மு காஷ்மீரில் பின்தங்கிய மாணவர்களுக்கு பயிற்சியளிக்க முடிவெடுத்த ரெய்னா துபாய்: ஜம்மு காஷ்மீரில் பின்தங்கிய மாணவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சியளிக்க முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா முடிவெடுத்துள்ளார். இதுகுறித்து ஜம்மு காஷ்மீரின் டிஜிபி தில்பாக் சிங்கிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கிரிக்கெட் மூலம் பின்தங்கிய மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்த 15ம் தேதி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ள சுரேஷ் ரெய்னா, தற்போது இத்தகைய முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல்லில் விளையாடும் ரெய்னா சர்வதேச போட்டிகளில் இருந்து கடந்த 15ம் தேதி தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. தான் விளையாடிய காலத்தில் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள இவர், தற்போது ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணி சார்பில் பங்கேற்று விளையாடுவதற்காக துபாயில் உள்ளார். ஐபிஎல் போட்டிகளில்…

Read More

தேர்தல் கூட்டணி: விஜயகாந்துக்கு கமல் தூது

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் அப்படியே தேர்தல் கூட்டணிக்கும் துாது விட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி எப்படி வேண்டுமானாலும் மாற வாய்ப்புள்ளதால் இப்போதிருந்தே கட்சிகள் துாது விட ஆரம்பித்து விட்டன.ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி வைக்கலாம் என எதிர்பார்த்துள்ள கமல் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக நினைக்கும் தே.மு.தி.க.வுக்கு துாது விட்டுள்ளார். இதுதொடர்பாக மறைமுக பேச்சில் இரு தரப்பு நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்துக்கு வாழ்த்து கூறிய கமல் ‘தமிழக அரசியல் களம் மீண்டும் முழுவீச்சில் உங்களை காண காத்திருக்கிறது. மக்கள் பணியை தொடர நண்பர் விஜயகாந்துக்கு வாழ்த்துக்கள்’ என கூறியிருந்தார். இதுகுறித்து கமல் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆண்டது…

Read More

ரசாயன கழிவுகளால் விஷமான புனித நதி: அரசு துறைகளின் அசட்டையால் பாழான நீராதாரம்

சாத்துார்:சாத்துாரில் வைப்பாறு நதியில் ரசாயன கழிவுகள், சாக்கடை நீர் கலந்து விஷத்தன்மையாக மாறி வருவதால் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் மேற்கு தொடர்ச்சி மலையில் உருவாகும் வைப்பாறு நதி தேனி, விருதுநகர் மாவட்டங்கள் வழியாக 130 கிலோ மீட்டர் துாரம் பயணித்து துாத்துக்குடி மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. இந்நதி நீர் மூலம் தேனி, விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களில் 5 ஆயிரத்து 288 சதுர கிலோ மீட்டர் நிலம் பாசன வசதி பெறுகிறது. விருதுநகர், துாத்துக்குடி மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்குகிறது. ஆற்றில் மணல் கொள்ளை தினமும் அரங்கேறி வருவதால் மணல் இல்லாத வறட்டாறு போல் வைப்பாறு நதி காட்சியளிக்கிறது. வைப்பாறு நதி பாயும் பகுதிகள் முழுவதும் 15 முதல் 20 அடி ஆழத்துக்கு மணல் கொள்ளையடிக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டமும்…

Read More

தூய்மை நகரில் 175வது இடம்: பின்நோக்கி செல்லும் விருதுநகர்

விருதுநகர்:மாவட்ட நகரங்கள் வழக்கம் போல் துாய்மை நகர தரவரிசை பட்டியலில் பின்தங்கிய நிலையில் விருதுநகரும் 175வது இடத்தை பிடித்துள்ளது. ஆண்டு தோறும் மத்தியரசின் துாய்மை இந்தியா திட்டத்தில் கீழ் சுவட்ச் சர்வேக் ஷன் இணையத்தில் துாய்மை நகரங்களின் தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்தாண்டும் விருதுநகர் மாவட்ட நகரங்கள் வழக்கம் போல் பின்தங்கிவிட்டன. சாத்துார் 63 , விருதுநகர் 175 , ஸ்ரீவில்லிபுத்துார் 93, சிவகாசி 100, அருப்புக்கோட்டை 103, திருத்தங்கல் 107, ராஜபாளையம் 260 என 7 நகராட்சிகளுமே பின்தங்கி உள்ளன.மத்திய அரசின் துாய்மை திட்டத்தை முறையாக கடைப்பிடிக்காததால் இன்றும் திறந்தவெளி கழிப்பிடங்கள் ஒழிக்கப்படாத நிலைதான் உள்ளது. அதே போன்று சாக்கடை கழிவுநீர், ஆங்காங்கே குப்பை என கொரோனா காலகட்டங்களில் கூட நகராட்சிகளின் பணிகளில் அதிருப்தியே தொடர்ந்தது. விருதுநகர் நகராட்சி நுழைவு பகுதியான நாகம்மாள்கோயில் கணேஷ்நகர் குடியிருப்பு…

Read More

தேயிலை தோட்டங்களுக்கு இயற்கை உரம்: கேரளா செல்கிறது விருதுநகர் மாட்டுச்சாணம்

விருதுநகர்மாவட்டத்தில் குக்கிராமங்களில் ஆடு, மாடு சாணத்தை மக்க வைத்து உரமாக்கப்படும் இயற்கை உரங்கள் கேரளாவில் உள்ள தேயிலை தோட்டங்களில் அடி உரமாக ஈடுவதால் இங்கிருந்து வாரம் ஆயிரம் டன் ஏற்றுமதியாகிறது. ரசாயன உரங்களை உரமாகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதாலும் மண் வளம் பாதிப்பதோடு விளை பொருட்கள் விஷமாகிறது. இதைதொடர்ந்து விவசாயிகள் இயற்கை உரத்தை நாடுவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவைகளை அங்குள்ள சுகாதாரத்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர். அவற்றில் ரசாயன பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்தியது தெரியவந்தால் திருப்பி அனுப்புகின்றனர்.இதனிடையே கேரள விவசாயிகள் விளை பொருட்களை இயற்கை யுடன் இணைந்து சாகுபடி செய்கின்றனர். இதனால் தேயிலை உள்ளிட்ட விளை பொருட்களில் இயற்கையான ருசி , சத்து குறையாமல் பார்த்துகொள்கின்றனர். இதற்கான இயற்கை உரம் பெற கேரள வியாபாரிகள் விருதுநகருக்கு படையெடுக்கின்றனர்.…

Read More

கலெக்டரிடம் அரசு சங்கம் முறையீடு

விருதுநகர்:அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் லியாகத் அலி கலெக்டர் கண்ணனிடம் அளித்த மனு : ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை செயலாக்க திட்டத்தின் மூலம் ஊதிய, இதர பட்டியல்கள் தயார் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் இணையதளம் அவ்வப்போது கட்ஆவதால் தயாரித்த பட்டியல் அழிகின்றன. ஆகஸ்ட் ஊதியம் கிடைப்பதில் சிக்கல் உள்ளதால் இதை சரி செய்ய கேட்டுள்ளார்.

Read More

கீர்த்தி மெஸ் திறப்பு

அருப்புக்கோட்டை:அருப்புக்கோட்டை காந்தி நகர் திருச்சுழி ரோட்டில் கீர்த்தி மெஸ் திறப்பு விழா நடந்தது. உரிமையாளர் தினேஷ் ராஜா வரவேற்றார். டவுன் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் திறந்து வைத்தார். அச்சம்மாள் கிளினிக் டாக்டர் பிருந்தா, கீர்த்தி தினேஷ் ராஜா, ஜெயராணி, சுமதி, ஆசிரியை இந்திரா குத்து விளக்கேற்றினர். தாலுகா எஸ்.ஐ., ஜோதிமுத்து, வி.ஏ.ஓ., பிருத்திவிராஜ், ரியல் எஸ்டேட் கருப்பசாமி, ஒய்வு மாவட்ட வன அலுவலர் ராஜேந்திரன், ஆலங்குளம் ஏ.டி.ஆர்., குழுமம் ராமச்சந்திரன், டாக்டர் ஜெகந்நாதன் கலந்து கொண்டனர்.

Read More

தானியங்கி சானிடைசர்

சாத்துார்:வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தானியங்கி சானிடைசர் மிஷின் பொருத்தப்பட்டு மற்ற அலுவலகங்களுக்கு முன் மாதிரியாக திகழ்கிறது . இதன் நடவடிக்கையை பொதுமக்கள் வரவேற்பதுடன் மற்ற அலுவலகங்களிலும் இது போன்று செயல்படுத்த மக்கள் கேட்டுள்ளனர்.

Read More