சர்வதேச கல்வியாளராக சிவகாசி ஆசிரியர் தேர்வு

சிவகாசி:சிவகாசி நாரணாபுரம் அரசு பள்ளி கணித ஆசிரியர் கருணைதாஸ் சர்வதேச அளவில் மைக்ரோசாப்ட்டின் சிறந்த கல்வியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அரசு பள்ளிகளில் தகவல் தொழில்நுட்பம் மூலம் கல்வி கற்பிக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் இலவச மென்பொருட்களை வழங்குகிறது. இதோடு ஆசியர்கள் மைக்ரோசாப்ட் இ மெயில் முகவரியுடன் இலவசமாக இணைந்து பல்வேறு வகையான பாடங்களை கற்று சான்றிதழ்கள், புள்ளிகளும் பெறலாம். இதில் சிறந்த ஆசிரியர்களை உலகளவில் சிறந்த கல்வியாளராக தேர்வு செய்கிறது.

இந்தாண்டு நாரணாபுரம் பள்ளி ஆசிரியர் கருணைதாஸ் தேர்வாகி உள்ளதோடு இப்பள்ளியையும் சிறந்த பள்ளியாக தேர்வு செய்துள்ளது.

Related posts

Leave a Comment