தேயிலை தோட்டங்களுக்கு இயற்கை உரம்: கேரளா செல்கிறது விருதுநகர் மாட்டுச்சாணம்

விருதுநகர்மாவட்டத்தில் குக்கிராமங்களில் ஆடு, மாடு சாணத்தை மக்க வைத்து உரமாக்கப்படும் இயற்கை உரங்கள் கேரளாவில் உள்ள தேயிலை தோட்டங்களில் அடி உரமாக ஈடுவதால் இங்கிருந்து வாரம் ஆயிரம் டன் ஏற்றுமதியாகிறது.

ரசாயன உரங்களை உரமாகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதாலும் மண் வளம் பாதிப்பதோடு விளை பொருட்கள் விஷமாகிறது. இதைதொடர்ந்து விவசாயிகள் இயற்கை உரத்தை நாடுவது அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் காய்கறிகள், பழங்கள், பால் உள்ளிட்டவைகளை அங்குள்ள சுகாதாரத்துறையினர் ஆய்வுக்கு உட்படுத்துகின்றனர்.

அவற்றில் ரசாயன பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் பயன்படுத்தியது தெரியவந்தால் திருப்பி அனுப்புகின்றனர்.இதனிடையே கேரள விவசாயிகள் விளை பொருட்களை இயற்கை யுடன் இணைந்து சாகுபடி செய்கின்றனர். இதனால் தேயிலை உள்ளிட்ட விளை பொருட்களில் இயற்கையான ருசி , சத்து குறையாமல் பார்த்துகொள்கின்றனர்.

இதற்கான இயற்கை உரம் பெற கேரள வியாபாரிகள் விருதுநகருக்கு படையெடுக்கின்றனர். குக்கிராமங்களில் ஆடு, மாடு வளர்ப்போரிடம் முன்பணம் செலுத்தி சாணத்தை மக்க வைத்து டன் கணக்கில் கொள்முதல் செய்கின்றனர்.

Related posts

Leave a Comment