தேர்தல் கூட்டணி: விஜயகாந்துக்கு கமல் தூது

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமல் அப்படியே தேர்தல் கூட்டணிக்கும் துாது விட்டுள்ளார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி எப்படி வேண்டுமானாலும் மாற வாய்ப்புள்ளதால் இப்போதிருந்தே கட்சிகள் துாது விட ஆரம்பித்து விட்டன.ரஜினி கட்சி ஆரம்பித்தால் அவருடன் கூட்டணி வைக்கலாம் என எதிர்பார்த்துள்ள கமல் தற்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக நினைக்கும் தே.மு.தி.க.வுக்கு துாது விட்டுள்ளார்.

இதுதொடர்பாக மறைமுக பேச்சில் இரு தரப்பு நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.சமீபத்தில் பிறந்தநாள் கொண்டாடிய விஜயகாந்துக்கு வாழ்த்து கூறிய கமல் ‘தமிழக அரசியல் களம் மீண்டும் முழுவீச்சில் உங்களை காண காத்திருக்கிறது. மக்கள் பணியை தொடர நண்பர் விஜயகாந்துக்கு வாழ்த்துக்கள்’ என கூறியிருந்தார்.

இதுகுறித்து கமல் கட்சி நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:தமிழகத்தை திராவிட கட்சிகள் ஆண்டது போதும் என்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டனர். இந்த நேரத்தில் மக்களின் நலனை மட்டுமே எண்ணும் கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டியது அவசியம்.குறிப்பாக ஓட்டுக்கு துட்டு எதிர்பார்க்கும் மக்கள் மனம் மாற வேண்டும்.இதற்கு ரஜினி கூறியது போல் மக்களிடையே எழுச்சி உருவாக வேண்டும். வரும் தேர்தலில் எங்கள் கட்சியோடு தே.மு.தி.க. – பா.ம.க. – கம்யூ. கட்சிகள் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related posts

Leave a Comment